செய்திகள் :

``தீவிரவாத நாடு, என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?" - பாக்., ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர்

post image

நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரின் இடையே செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த

ஊடகவியலாளர் ஒருவர் , `பாகிஸ்தானில் இந்தியா எப்போது பயங்கரவாதத்தை ஆதரவளிப்பதை நிறுத்தும்' என்று கேள்வி எழுப்பினார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "ஒரு பயங்கரவாத நாடா என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது?" என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும், செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்த கையோடு, அமைச்சர் ஜெய்சங்கரும் அவருடன் வந்த பிரதிநிதிகளும் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேறினர். இதற்கிடையே, அந்தச் செய்தியாளர் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி பேசுகையில், ``பாகிஸ்தான் பிற நாடுகளின் நிலப்பரப்பைக் கைப்பற்ற முயல்வதைக் காட்டிலும் அல்லது பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும், தன் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே அந்நாட்டு மக்களுக்குச் செய்யும் நன்மையாகும்.

ஏனெனில், இத்தகைய செயல்களோ அல்லது ஐ.நா.வில் நாடகமாடுவதோ பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் கடன்களை அடைக்கப் போவதில்லை. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது பல பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்தும் பாகிஸ்தான் அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை.

க்ஷிதிஜ் தியாகி
க்ஷிதிஜ் தியாகி

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ஜூன் மாதத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், உணவு மற்றும் மருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இந்த கவுன்சிலில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அளித்த பதில் வெறும் நடைமுறைத் தடைகளை எழுப்பியது மட்டுமே. இந்த கவுன்சிலின் தீவிர விசாரணைக்கு முழு தகுதியுள்ள ஒரு நாடு இருக்குமேயானால், அது பாகிஸ்தான் மட்டுமே" எனத் தெரிவித்தார்.

'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' - மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு

சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.இந்த நேரத்... மேலும் பார்க்க

"உலகில் உள்ள தெற்கு நாடுகளில் '4F'-ல் இக்கட்டான சூழல்" - ஜ.நாவில் ஜெய்சங்கர் பேச்சு

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.அந்தக் கூட்டத்தில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.நேற்று இந்தியா சார்பாக இந்தியாவின் வெ... மேலும் பார்க்க

கரூர் துயரச் சம்பவம்: "மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு..!" - முதல்வர்‌ விஜய் பதிவு

இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது.தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் கரூர் பிரசாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.அந்தச் சம்பவத்தின... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த கூட்டம்: 3 ஆணையர்களும் 'பிரசன்ட்'; ஆனால், எந்தப் பதிலும் இல்லை!

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி இடையே இருந்த கருத்து வேறுபாடு கடந்த வாரம் வெட்டவெளிச்சமானது.இரு தேர்தல... மேலும் பார்க்க

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி

அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்தவர் என்.எஸ்.சரவணன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உட்கட்சியில் எழுந்த சில பிரச்னைகளால் மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத்... மேலும் பார்க்க

கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல்: கண்ணூரில் விற்ற லாட்டரிக்கு ரூ.30 கோடி பம்பர் பரிசு!

கேரள அரசின் லாட்டரித்துறை சார்பில் சித்திரை விஷூ, ஆயுதபூஜை, திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்குபம்பர் பரிசுகளுடன் கூடிய லாட்டரி வெளியிட்டு விற்பனை செய்வது வழக்கம். கடந்தமுறை வரை ஓணம் பண்டிகைக்கு 25 கோடி... மேலும் பார்க்க