செய்திகள் :

தீவிர தோல் நோய் பாதிப்பு: ``என்ன நடந்தாலும் பணியைத் தொடர்வேன்' - பிட்டு தபாஹி உறுதி

post image

மத்தியப் பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தபாஹி (Bittu Tabahi), கடந்த ஜனவரி 26 அன்று நதியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தனியாகத் தொடங்கினார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது. முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உட்படப் பல பிரபலங்கள் இவரது சேவையைப் பாராட்டித் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

பிட்டு தபாஹி
பிட்டு தபாஹி

அதைத் தொடர்ந்து, பிட்டு தபாஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" எனப் பதிவிட்ட புதிய வீடியோ ஒன்று பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நதியின் கரைகளை அவர் முழுமையாகச் சுத்தம் செய்து முடித்துச் சில வாரங்களே ஆன நிலையில், மீண்டும் அந்த நதி முழுவதிலும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிகள் மற்றும் பூக்கள் மிதந்து நதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பிட்டு தபாஹி கையில் ஒரு ஆரஞ்சு நிறக் கம்புடன் கலங்கலான ஆற்று நீரில் இறங்கி, நீரில் மிதக்கும் சாமந்திப் பூக்கள், பிளாஸ்டிக் உறைகள் மற்றும் தெர்மோகோல் கழிவுகளை வெளியேற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

தான் ஆற்றைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே, சிலர் தனக்கு முன்னாலேயே கழிவுகளை ஆற்றில் கொட்டிச் சென்றதாகவும், நதிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பு வசதிகளைச் சிலர் சேதப்படுத்தி நீரில் தூக்கி வீசியதாகவும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நதியை எவ்வாறு நிரந்தரமாகவும் திறம்படவும் தூய்மைப்படுத்துவது என்பது குறித்துத் தனது Followers களிடம் ஆலோசனைகளைக் கேட்டிருந்தார். இந்த நிலையில், தொடர்ந்து கழிவுநீரில் இறங்கி பணியாற்றியதால் தற்போது தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கைகள் மற்றும் கால்களில் கடுமையான அரிப்பு, வலியால் அவதிப்பட்டு வரும் இவர், இரவு நேரத்தில் மாத்திரைகளை உட்கொண்டே தூங்க முடிகிறது. இருப்பினும், நதியை மீட்கும் தனது லட்சியத்தில் இருந்து பின்வாங்காமல், வலிநிவாரணிகளை உட்கொண்டு தினமும் காலையில் மீண்டும் தூய்மைப் பணிக்குச் சென்று வருகிறார்.

பிட்டு தபாஹி
பிட்டு தபாஹி

இவரின் உடல்நிலையைக் கண்டு அச்சமடைந்த பெற்றோர், உடனடியாக இந்த ஆபத்தான பணியை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும், தனது தூய்மைப் பணியைத் தொடர்ந்து வருகிறார். ``எனது ஊரின் அடையாளமாகத் திகழும் நதி மீண்டும் குப்பைக் கிடங்காவதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை" என்கிறார்.

இவர் மாதக்கணக்கில் போராடி நதியைச் சுத்தம் செய்தபோதிலும், அப்பகுதி மக்கள் மீண்டும் அதில் குப்பைகளைக் கொட்டத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் குப்பை போடாமல் இருக்கத் தனது சொந்தச் செலவில் நதிக்கரையில் குப்பைத்தொட்டிகளை அமைத்தும் பலனில்லாமல் போயுள்ளது.

இது குறித்துப் பேசிய பிட்டு, "உடல் வலிக்கிறது, ஆனால் எனது லட்சியம் தோற்கவில்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் எந்த ஒரு மாணவனும் தனது ஆரோக்கியத்தைப் பணயம் வைக்க வேண்டிய நிலை வராது" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு தனிநபரின் போராட்டம் நதியைத் தற்காலிகமாகச் சுத்தம் செய்ய உதவினாலும், கழிவு மேலாண்மைக்கான நிலையான உள்கட்டமைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் தீவிர தலையீடு இல்லாமல் நதிகளைப் பாதுகாக்க முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள சாடோங் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சியோ சியோ சூ (Xiao Xiao Xu). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். தாயாரும் ம... மேலும் பார்க்க

``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" - ஒற்றை ஆளாக நதியை சுத்தம் செய்த பிட்டு ஆதங்கம்!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தப... மேலும் பார்க்க

ஜெர்மனி: 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ; அதிர்ச்சியில் காவல்துறை - என்ன நடந்தது?

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று தகாதமுறையில் நடந்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியின் கொலோன் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே 16 வயது சிறுமி தன் தோழிகளுடன் நி... மேலும் பார்க்க