செய்திகள் :

தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்..." - அபிஜித் திப்கே

post image

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ஒன்றுகூடி தேசியக் கொடியை அசைக்குமாறு பொதுமக்களையும் தனது ஆதரவாளர்களையும் அந்த அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் இன்று மாலை நடக்கும் இந்தத் தேசியக் கொடி அசைப்பு பேரணியில் காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே பங்கேற்க இருக்கிறார்.

ஆனால் இப்பேரணியைத் தடுக்கும் விதமாக புதுடெல்லி மாநகராட்சி நிர்வாகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்ட்ரல் பார்க் பொதுமக்களுக்கு மூடப்படும் என்று அறிவித்தது.

போலீஸார் கொடுத்த நோட்டீஸ்
போலீஸார் கொடுத்த நோட்டீஸ்

அதே நேரத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டும் தேசியக் கொடியை அசைக்கவும், தேசிய கீதத்தைப் பாடவும் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொடுக்க முடியும் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி போலீஸார் இன்று அபிஜித்தை நேரில் சென்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது தேசியக் கொடி அசைப்பு பேரணி நடத்தவேண்டாம் என்று கூறி நோட்டீஸ் கொடுத்தனர்.

அதில் நீங்கள் (திப்கே) சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டு வருகிறீர்கள். இது சட்டவிரோதமான செயலாகும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனைப் பார்த்தபிறகு அபிஜித் திப்கே போலீஸாரைப் பார்த்து, "நீங்கள் என்ன கேலி செய்கிறீர்களா? இதையா நோட்டீஸ் என்று அழைக்கிறீர்கள்? உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதுகிறீர்கள்'' என்று அஜிபித் திப்கே கேட்டார்.

மேலும் தேசியக் கொடி அசைப்பு பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்றும், என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள் என்றும் அபிஜித் தெரிவித்தார்.

இதையடுத்து தேசியக் கொடியை அசைப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும், ஆனால் அனுமதி பெறாமல் பேரணி நடத்துவதும் கூட்டத்தைக் கூட்டுவதும் கட்டுப்பாடுகளை மீறும் செயல் என்பதால், அவ்வாறு செய்தால் சட்டப்படி போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் திப்கேவிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசியக் கொடி விதிமுறைக்கு இணங்க, தேசியக் கொடியை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியமும், அது தொடர்பான கட்டுப்பாடுகளும் அவருக்கு எடுத்துரைக்கப்பட்டன.

டெல்லி போலீஸார் ஜந்தர் மந்தருக்குச் செல்லும் வழி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய வணிக மையமான கன்னாட் பிளேஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" - ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது எ... மேலும் பார்க்க

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியாக் கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ... மேலும் பார்க்க

"ஸ்டாலின், விஜய் ரெண்டு பேருமே பாராட்டினாங்க" - பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னி பேட்டி

கோவையின் புதிய அடையாளமாக மாறியிருக்கும் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார். ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தை சென்னை கட்டடக்கலை நிபுணர் பொன்னி என்பவர்... மேலும் பார்க்க

10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்... டெண்டர் கோரிய தமிழ்நாடு காவல்துறை

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்றோரின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் பொருட்டு ட்ரோன்களை வீழ்த்தும் வகையில் ஆன்டி ட்ரோன் துப்பாக்கிகளை வாங்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ட்ரோன் கேமராதா... மேலும் பார்க்க

அமெரிக்கா: கோயிலில் திரண்டிருந்த இந்தியர்கள்; துப்பாக்கி வேலை செய்யாததால் தடுக்கப்பட்ட விபரீதம்

அமெரிக்காவில் சிகாகோவிற்கு அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்.வழக்கம் போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), அந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் ஆகிக... மேலும் பார்க்க