10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்... டெண்டர் கோரிய தமிழ்நாடு காவ...
மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பு: “ஒடுக்குமுறை மத அடிப்படையிலானதல்ல” - மு.வீரபாண்டியன்
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், “முன்பு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்கும் இடஒதுக்கீடு கிடையாது” என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட மதநம்பிக்கை மற்றும் மத வழிபாட்டிற்கான சுதந்திரத்தை ஓர் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் தங்களின் முந்தைய சாதி அடையாளத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகைகளைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
இடஒதுக்கீடு மத அடிப்படையிலானது இல்லை
இடஒதுக்கீடு என்பது மத அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியோர் என்ற அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, வர்ணம் மற்றும் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் கல்வி,
கலாசார வாழ்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, பலவந்தமாகப் பிற்படுத்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டு வந்துள்ளனர்.
மாறிவிடுவதில்லை
சாதி அடிப்படையில் வழிவழியாக, குலத்தொழில் முறை கட்டாயமாக்கப்பட்டு, சில குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைத் தூய்மையற்ற தொழில் செய்பவர்களாக அடையாளப்படுத்தி, அதிலிருந்து விடுபட முடியாத நிலையை உருவாக்கியிருந்தது.
இந்தச் சமூக ஒடுக்குமுறைகள் மதத்தின் அடிப்படையில் உருவானதல்ல. மதம், மதக் கோட்பாடுகள் பொருளாதாரச் சுரண்டலை நியாயப்படுத்தி, சமூகச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதைப் பாதுகாக்கும் கருவியாக ஆளும் தரப்பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இஸ்லாம் மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு - அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது உடனடியாக அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மதம் மாறியோரின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். https://t.co/yNfGpYM6Ru
— CPI Tamilnadu (@CPItnOfficial) October 16, 2026
மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரின் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலை மாறிவிடுவதில்லை.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் சாதியினர் அனைவரும் சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
வலியுறுத்துகிறது...
எனவேதான் நமது அரசியல் சட்டம், சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்துள்ளது. இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது.
எனவே, மதம் மாறிய போதிலும் ஏற்கனவே பெற்றுவந்த அதே இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பட்டியல் சாதியினரும்,
பிற்படுத்தப்பட்டோரும் தொடர்ந்து பெறும் வகையில் உடனடியாக அரசியல் சட்டத் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












