செய்திகள் :

பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

post image

கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு நூலகத்தை கோவையில் இன்று (அக்.16) முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.

வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள்.

இந்த Cheap CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?

‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?

இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை Cancel செய்வது - Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த Dummy முதலமைச்சர் நடத்த வேண்டும்" என்று விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம... மேலும் பார்க்க

``ஆம், ஆட்சி மாற்றம்தான் எங்கள் விருப்பம்" - பிரசாந்த் பூஷண் அதிரடி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது.தேர்தல் முறைகேடுகள், எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளி... மேலும் பார்க்க

'மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகிறார்கள்!' - அமைச்சர் வெங்கட்ரமணன் சர்ச்சை

தமிழகத்தில் விலைவாசி உச்சத்தை தொட்டிருக்கிறது. குறிப்பாக, அரிசியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரிசி விலை உயர்வு பற்றி பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன... மேலும் பார்க்க

'நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது'- அன்புமணி விமர்சனம்

சென்னையில் 1,000 'ஏசி' மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு, மறு நாளே ரத்து அறிவிப்பை திரும்ப பெற்றது. "தவறுதலாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவற்றை வாபஸ் ப... மேலும் பார்க்க

விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! - கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன்பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்ட... மேலும் பார்க்க

'டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!'- அபிஜித் தீப்கே

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ஒர... மேலும் பார்க்க