செய்திகள் :

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்" - ராகுல் காந்தி

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தேர்தல் முறைகேடுகளுக்கு பின்னணியில் இருந்து சதி செய்து, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதுதொடர்பாக கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாட்டின் நலனைக் கருதி ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகி "அப்ரூவராக" மாற வேண்டும். ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி "வாக்கு திருட்டு" பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வந்ததன் காரணமாகவே, மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் ஞானேஷ் குமாருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தும் முறைகேடாகவே நடத்தப்பட்டன என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

கடந்த 2025 பிப்ரவரியில் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக நான் அளித்த மறுப்பு குறிப்பை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மேலும், 2014-க்குப் பிறகு பாஜக 30 முதல் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று அமித் ஷா பேசிய பழைய வீடியோக்களையும், 2024 தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களை வெல்லும் என்று பிரதமர் மோடி பேசியதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் எதிர்கொள்ளும் ஆட்சி எதிர்ப்பு அலையை, மோடியும் அமித் ஷாவும் மட்டும் எப்படி எதிர்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது புதிர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களின் வாக்கிலிருந்துதான் அரசியலமைப்புச் சட்டம் தன் அதிகாரத்தைப் பெறுகிறது. அந்த அரசியலமைப்பில் இருந்தே சட்டங்கள் உருவாகின்றன. சட்டங்களில் இருந்தே நமது பொது நிறுவனங்கள் இயங்குகின்றன. வாக்குரிமை சிதைக்கப்பட்டால் அரசியலமைப்புச் சட்டமும், அதனடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களும், நிறுவனங்களும் தங்கள் மதிப்பையும் செல்லுபடியாகும் தன்மையையும் இழந்துவிடும். "திருடப்பட்ட வாக்குகள்" மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் சட்டவிரோதமானதே." என்றார்.

வீரமணி வழக்கு: `யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை' - ஸ்டாலின்

வீரமணி போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" - அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,"திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 590 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் ச... மேலும் பார்க்க

``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ - திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க

மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் - தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப... மேலும் பார்க்க

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற... மேலும் பார்க்க