செய்திகள் :

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

post image

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது.

திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் தவெகவின் வெற்றி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியிருக்கிறார்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் முதல்வர் விஜய்
வெற்றிக் கொண்டாட்டத்தில் முதல்வர் விஜய்

"முதல்வர் விஜய் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்து மு.க.ஸ்டாலின், உதயநிதி, அதிமுகவினர் பரப்புரை செய்தனர். எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்ததையும் மீறி ஆளுங்கட்சி பணம் செலவு செய்யாமல் வெற்றிபெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற்றது தவெக அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம். அனைத்துத் தலைவர்களும் முதல்வர் விஜய் தெரு, தெருவாக இரண்டு நாள் பிரசாரம் செய்ததை விமர்சிக்கிறார்கள். ஆனால் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் முன்னாள் முதல்வரும் மக்களைத் திரட்டி அவதூறு பிரசாரம் செய்தார்கள். அவர்கள் முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.

முதலமைச்சர் மீது மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையையும், இந்த ஆட்சியில் ஊழல் இல்லை என்பதையும் மக்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து, "நம்மைக் கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது. இது இடைக்கால வெற்றிதான்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கை குறித்த கேள்விக்கு, "தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அவர் சொல்வதைப் பார்த்தால் எதுவுமே யாருக்கும் நிரந்தரமில்லை. இது இடைக்கால வெற்றி என்கிறார். அவர் நிரந்தரமாக வென்றுவிட்டாரா? இந்த வெற்றி அடுத்து வரும் தேர்தல்களிலும் தவெகவின் வெற்றியை உறுதி செய்கிறது. வெற்றிகள் தொடரும்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்ன... மேலும் பார்க்க

'வறட்சி, நிதி பற்றாக்குறை' - மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய... மேலும் பார்க்க

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது ப... மேலும் பார்க்க

மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் த... மேலும் பார்க்க

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்ட... மேலும் பார்க்க

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம... மேலும் பார்க்க