செய்திகள் :

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

post image

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது பார்த்தாலும் ஆளுநரை எதிர்த்துதான் பேசியுள்ளனர். ஆனால், நாங்கள் எங்களுடைய முதல் மாநாட்டிலேயே பாஜகவை எங்கள் கொள்கை எதிரி என்று அறிவித்தோம்.

இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? இப்படி அறிவித்த எங்கள் தலைவரைப் பார்த்து பேசுவதற்கு இவர்களுக்கு அருகதை கிடையாது.

எஸ்.ஐ.ஆரை எதிர்த்து குரல் கொடுத்து போராட்டம் செய்தது தமிழக வெற்றிக் கழகம். போராட்டத்திற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. அனுமதிக்கப்படாத இடத்தில் ‌யார் போராட்டம் செய்தாலும், காவல்துறை தடுக்கத்தான் செய்வார்கள். தவெக நிகழ்ச்சி நடத்தினாலும் அதைத்தான் செய்வார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் இடங்கள் உள்ளன. அனுமதிக்கப்படாத இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தினர் அரசும் உறுதுணையாக இருக்கும்.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

டெல்லி போராட்டம் தனி இயக்கம் நடத்தும் போராட்டம். அதற்கு ஆதரவு கொடுக்க தேவையில்லை. அவர்களுக்குப் பின்னால் இருந்து யார் இயக்குகிறார்கள் என்று தெரியாது. எஸ்.ஐ.ஆர் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் 170 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்.

இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளும் அதிமுக கோட்டையாக இருந்தது. எடப்பாடி எந்த நிலைக்குக் கொண்டு போய் சென்று விட்டார் என்பதை பார்க்க முடிகிறது. அதிமுகவின்‌ ஒட்டுமொத்த வாக்குகளும் விஜய்யை நோக்கி வந்துள்ளது. மூன்றாவது இடத்திற்குப் போய் இருக்கிறது அதிமுக” என்றார்

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்ன... மேலும் பார்க்க

'வறட்சி, நிதி பற்றாக்குறை' - மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய... மேலும் பார்க்க

மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் த... மேலும் பார்க்க

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்ட... மேலும் பார்க்க

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத... மேலும் பார்க்க

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம... மேலும் பார்க்க