செய்திகள் :

CJP: ``டம்மி முதல்வர் யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்" - உதயநிதி ஸ்டாலின்

post image

சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை குண்டுக்கட்டாக காவல்துறை கைது செய்திருக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியின் ஜந்தர் மந்தரில் சிஜேபி அமைப்பு இன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் சிஜேபி ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்ன... மேலும் பார்க்க

'வறட்சி, நிதி பற்றாக்குறை' - மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய... மேலும் பார்க்க

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது ப... மேலும் பார்க்க

மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் த... மேலும் பார்க்க

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்ட... மேலும் பார்க்க

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத... மேலும் பார்க்க