செய்திகள் :

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி... நவராத்திரி விழாவில் சோகம்!

post image

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சினோர் பகுதியிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி செங்குத்தான சரிவுப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்தது. கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த அப்பாதையில் வைக்கப்பட்டிருந்த காவல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த லாரி, சாலையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது பாய்ந்து, கோயிலின் நுழைவு வாயில் மற்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து
விபத்து

இவ்விபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தவுடன் 39 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் 15 பேர் உயிரிழந்ததாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும் 5 முதல் 6 பேர் கடுமையான எலும்பு முறிவுகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குவாலியர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) தர்மவீர் சிங், ``நவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச் சாவடியையும் தடுப்புகளையும் மீறி லாரி எவ்வாறு உள்ளே நுழைந்தது என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், லாரியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்து (RTO) சிறப்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குச் சீரான சிகிச்சை வழங்க எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். த... மேலும் பார்க்க

சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையி... மேலும் பார்க்க

பீகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சிறார் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் பக்கத்து கிராமத்தில் நடக்கும் விருந்து ஒன்றில் பங்கேற்பதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரகோபூர் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் ஒரு கரை... மேலும் பார்க்க

'எல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார் ' போதையில் கார் ஓட்டி 3 உயிரைப் பறித்த தொழிலதிபர் மகன்!

கேரளத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘இஹா டிசைன்ஸ்’ சேர்மன் சஜீவ் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நூஹா ஆகியோரின் மகனான சுஹைல் சஜீவ்(19). இவர் காக்கநாடு ராஜகிரி கல்லூரியில் பி.காம் பயின்று ... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்; அலையில் அடித்துச் செல்லப்பட்ட 8 மாணவர்களுக்குச் நேர்ந்த சோகம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த வின்னர்ஸ் அகாடமி என்ற கோச்சிங் மையத்தில் படிக்கும் மாணவர்கள் அடங்கிய 48 பேர் கொண்ட குழு மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான திவேகர்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் தூங்கியவர்கள் மீது ஏறிய ஜே.சி.பி; இருவர் பலியான சோகம்!

பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பார்க்கிங் பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஜேசிபி வாகனம் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதா... மேலும் பார்க்க