`நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்' - சென்னையில் UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் - அனு...
`நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்' - சென்னையில் UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!
'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.
'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , Dr. P.விஜயகுமார், IPS இணை ஆணையர், பெருநகர சென்னை தெற்கு (சட்டம் & ஒழுங்கு), Dr. சத்யஸ்ரீ பூமிநாதன் இயக்குநர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, திரு.ஆதில பெய்க் சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
















