செய்திகள் :

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாஷின் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

​பழனி தண்டபாணி மடத்தின் நில மோசடி தொடர்பாகத் தொடக்கத்தில் பழனி அடிவாரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது

இதையடுத்து திண்டுக்கல் மற்றும் பழனியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைதுசெய்தனர்.

கார் பார்க்கிங்காக உள்ள கோயில் நிலம்

இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தரும், இடைத்தரகருமான ஜெயபிரகாஷ் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, ஜெயபிரகாஷை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தது.

ஒரு நாள் விசாரணை போதுமானதாக இல்லை என்றும், வழக்கு தொடர்பான சந்தேகங்களுக்குப் போதிய விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறி, அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

​கடந்த 22-ஆம் தேதி இந்த மனு நீதிபதி பத்மநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயபிரகாஷை 24-ஆம் தேதி மதியம் 1 மணி வரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ்

இதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், ஒட்டன்சத்திரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த 2 கணினி CPU-க்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த விசாரணையின்போது ஜெயபிரகாஷ் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​3 நாள்கள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் ஜெயபிரகாஷை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அத்துடன், அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 2 கணினி CPU-க்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, ஜெயபிரகாஷ் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டார்.

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காக்ரோஜ் ஜனதா கட்சி ந... மேலும் பார்க்க

வீரமணி போக்சோ வழக்கு: ``குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்..." - எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நா... மேலும் பார்க்க

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்... ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' - ஜான் பாண்டியன் பேட்டி

'ஜெம்' வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" - காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவர... மேலும் பார்க்க

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் பு... மேலும் பார்க்க