செய்திகள் :

"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" - செனட்டர் அப்துல் எல்-சையத்

post image

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இது குறித்து அமெரிக்க (மிச்சிகன்) செனட்டர் அப்துல் எல்-சையத்திடம் நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “சர்வதேசச் சட்டத்தை நாம் பின்பற்றுகிறோம் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? இது வெறும் இஸ்ரேல் பற்றியது மட்டுமல்ல.

நெதன்யாகு - ட்ரம்ப்
நெதன்யாகு - ட்ரம்ப்

எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான்...

எனது குடும்பம் புலம்பெயர்ந்து வந்த எகிப்து நாட்டிற்கும் நான் இதையேதான் பொருத்திப் பார்க்கிறேன். பாகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் நான் இதே அணுகுமுறையைத்தான் கையாள வேண்டும்.

சர்வதேசச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் நாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இஸ்ரேல் நல்ல தொடக்கம்

சர்வதேசச் சட்டங்களை மீறுவதற்காக நம்மிடமிருந்து பெறும் பணத்தைப் பயன்படுத்தும் ஒரு நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்துவது ஒரு நல்ல தொடக்கம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இஸ்ரேல் நாட்டில் இனப்படுகொலை மற்றும் இனவெறிக் கொடுமை போன்ற மிக மோசமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை விற்பனை செய்வதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார்.

"மேக்கேதாட்டூ அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" - டி.கே.சிவக்குமார்

மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.மேக்கேதாட்டூ அணை கட்டுவதன் மூலம் பெங்களூரின் குடிநீர் தேவைக்காக 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படும்... மேலும் பார்க்க

நூல் கொள்முதல் விவகாரம்: ``Family Fund; முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்"- அமைச்சர் அருண் ராஜ்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளால் ஏற்படும் தீக்காயங்கள் மற்றும் விபத்துகளுக்கு உடனடிச் சிகிச்சை ... மேலும் பார்க்க

"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" - ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி – வருந்தும் சொந்த கிராம மக்கள்இப்படியொரு தலைப்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி விகடன் தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம்.அமைச்சர் ஜெகதீவரியின... மேலும் பார்க்க

`கோவை நூலக புத்தகங்களில் ஊழல்; முதல்வர், அமைச்சர்களுக்கும் பங்கா?' - நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் ஆளுங்கட்சி இதுவரை எந... மேலும் பார்க்க

ஈரான் - அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' - என்ன நடக்கிறது?

ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா கடலோரப் பகுதிகளான கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பண்டார் அப்பாஸ் உள்ளிட்ட பல இடங்களில் சனிக்கிழமை மாலை பயங்கர வெட... மேலும் பார்க்க