செய்திகள் :

போராடும் விவசாயிகள்; நெருக்கும் எதிர்க்கட்சிகள்! - டெல்டாவில் என்ன செய்யப் போகிறது தவெக அரசு?

post image

போதிய மழை இல்லாததால் டெல்டாவில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வறட்சியிலிருந்து தங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் போராடி வருகின்றனர். 'அரசு விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் உங்களை தேடி வருகிறோம்' என டெல்டா விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க திமுக ஒரு குழுவை அமைத்திருக்கிறது. ஏனைய எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை பேசி அரசுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கின்றன. அரசு என்ன செய்யப்போகிறது?

டெல்டா (File Image)

பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவான அளவே பெய்திருப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்பு தவெகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் நால்வருமே முதல்வரிடம் டெல்டா விவசாயிகள் பிரச்னையையே பிரதானமாக பேசியிருக்கின்றனர்.

'டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். டெல்டா விவசாயிகளின் பிரச்னைகளை அறிய முதல்வரே நேரில் வர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்துவிடாதபடிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க ஒரு தனிக் குழுவையே அமைத்திருக்கிறார். ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருந்ததாவது, 'தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, உணவளிக்கும் விவசாயிகள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரும் திறக்கவில்லை. வறட்சி நிவாரணமும் அறிவிக்கவில்லை. டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி என அனைத்திலும் முழுப்பயனை எட்ட முடியாத அளவுக்குத்தான் தவெக அரசின் செயல்பாடு இருந்து வருகிறது.

விளம்பர மோகத்தில் விவசாயிகளின் குரலைக் கேட்காமல், காலம்தவறி மேட்டூர் அணையைத் திறந்ததால், இப்போது தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களின் நிலை பற்றியும், அதனைக் கண்டு கண்ணீர் விடும் விவசாயிகளின் அழுகுரலும் முதல்வரின் காதுகளுக்கு எட்டாத நிலைதான் நீடிக்கிறது.

காவிரி டெல்டா பகுதியை வறட்சியால் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை காதில் வாங்காமல் அவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல் புறந்தள்ளி வருகிறது ஆளும் தவெக அரசு. அத்துடன் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பயிர்க் கடனில் கடன் வைத்துள்ளதைத்தான் பார்க்கிறோம்.

இந்த ஒட்டுமொத்தப் பிரச்னைகள் குறித்தும் டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஏ.கே.எஸ். விஜயன், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., அருண் நேரு எம்.பி., முரசொலி எம்.பி. மற்றும் செந்தில் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்' எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் வினோத்
அமைச்சர் வினோத்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், திருப்பரங்குன்றம் தீப பஞ்சாயத்து போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் டெல்டா வறட்சியும் அரசுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. டெல்டா விவசாயிகளின் கவலையைப் போக்க அரசு என்னதான் திட்டம் வைத்திருக்கிறது என வேளாண்துறை அமைச்சர் வினோத்திடமே பேசினோம். அவர் கூறியதாவது, 'எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக விமர்சிக்கின்றனர். ஆனால், நாங்கள் களத்தில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மழை பொய்த்துப் போனதால் டெல்டா விவசாயிகளுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. எங்கெங்கே வறட்சியால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறோம். தினசரி டெல்டா மாவட்டங்களிலிருந்து அதிகாரிகள் மூலம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டே இருக்கிறோம். முதல்வரும் இந்த விஷயத்தில் அப்டேட்களை கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு உயர்நிலைக் குழுவையும் அமைத்திருக்கிறோம். அதில், வேளாண்துறை அமைச்சகத்தின் சீனியர் அதிகாரிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விளைநிலங்களை பார்வையிட்டு பாதிப்புகளை அறிந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ட்ரோன்கள் மூலம் பயிர்களுக்கு PPFM தெளிப்புகளைச் செய்து வருகிறோம். அதன் மூலம் இன்னும் 10-15 நாள்களுக்கு பயிர்களை கருகாமல் காப்பாற்ற முடியும். டிசம்பரில் மழைப்பொழிவு இருக்குமென வானிலை மையம் கூறியிருக்கிறது. சூழலை கவனித்துக் கொண்டே இருக்கிறோம். விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து உரிய நிவாரணத்தை முதல்வர் அறிவிப்பார்' என்றார்.

சென்னையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு!

முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜய் மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "நேற்று முன்தினம் SP-ஐ சந்தித்து ஆட்சியர் புகார் அளித்தார்" - DGP தகவல்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அந்த மாவட்ட கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் விளக்கமளித்துள்ளார்...“காவல்துறைக்கு... மேலும் பார்க்க

``தவெக `ஹனிமூன் பீரியட்' என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல" - உதயநிதி ஸ்டாலின்

DGP-யிடம் புகார்!பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரம், தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், அருள் விக்னேஷை கைதுசெய்ய வ... மேலும் பார்க்க

"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கிறது" - இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கு ஈரானின் 'ஷார்ப்' பதில் என்ன?

ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்...“அமெரிக்காவிற்குள்ளேயே ஈரானிய ரகசியக் குழுக்கள் ஊடுருவிச் செயல்பட்டு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: `இதனால் தான் தூணில் தீபம் ஏற்றவில்லை; வருத்தம்.!" - ஆட்சியரின் 17 பக்க அறிக்கை

தீபத் தூணில் தீபம் ஏற்றத் தேவஸ்தானம் குழு அமைத்துப் பெயர்களைப் பரிந்துரைக்காததால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

"உதயநிதி, நாதக பெண்ணை இரவு உடையிலேயே கைது செய்தது தவெக அரசு; ஆனால், தவெக MLA-வை..." - கனிமொழி

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது இன்னும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்காதது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...“எதிர்க்கட்சியினர் மீது ... மேலும் பார்க்க