செய்திகள் :

வேலூர்: காதல் மனைவி வெட்டிக் கொலை - நடத்தை சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!

post image

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். ஆவின் பாலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கும், கீர்த்திகா (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மனைவி கீர்த்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஹரிபிரசாத் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் உச்சகட்டமாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் கீர்த்திகாவை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீர்த்திகா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

கீர்த்திகாவின் தாய் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை அருகே உள்ள திருமண தகவல் மையத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை பணிக்குச் சென்ற அவர், மகள் கீர்த்திகாவையும் தன்னுடன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த ஹரிபிரசாத், மனைவியைத் தீர்த்துக்கட்டும் கொலை வெறியுடன் இன்று மதியம் 12 மணியளவில் கையில் அரிவாளுடன் அந்த திருமண தகவல் மையத்திற்குள் நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கீர்த்திகாவை நோக்கிப் பாய்ந்த அவர், மனைவியை சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

கணவன் ஹரிபிரசாத்துடன் மனைவி கீர்த்திகா

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கீர்த்திகா தன் கைகளால் அரிவாள் வெட்டைத் தடுக்க முயன்றார். ஆனால், வெறி அடங்காத ஹரி பிரசாத் தொடர்ந்து வெட்டியதில் கீர்த்திகாவின் இரண்டு கைகளும் துண்டாகின. மேலும், கழுத்து மற்றும் வாய் பகுதிகளிலும் ஆழமாக வெட்டியதால், தப்பி ஓட வழியின்றி ரத்த வெள்ளத்தில் சரிந்த கீர்த்திகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு மகளைக் காப்பாற்ற ஓடிவந்த தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்து காயமடைந்தார்.

மனைவி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்த ஹரிபிரசாத், நேராக சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கீர்த்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த கீர்த்திகாவின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், ஹரிபிரசாத்தைக் கைது செய்து இக்கொடூரச் சம்பவத்திற்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இக்கொலைச் சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கோர்ட் வளாகத்தில் வைத்து கை துண்டிப்பு; துப்பாக்கிச்சூடு- குற்றவாளியைக் கொல்ல நடந்த பரபரப்பு சம்பவம்

புனே, சிவாஜிநகர் கோர்ட்டில் ஆஜராவதற்காக மந்தர் மாருதி என்பவர் வந்தார். அவர்மீது கடந்த ஆண்டு நடந்த கொலை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிலம் மற்றும் நிதிப் பிரச்னை தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் ம... மேலும் பார்க்க

இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சகஊழியர்கள்; இரு பெண்கள் உட்பட மூவர் கைது

டெல்லியில் உணவகம்(கேபே) ஒன்றில் பணிபுரியும் 22 வயது இளம் பெண் தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவருடன் பிரீத் விகார் பகுதியில் இருக்கும் 'சல்டனேட் கேஃப்' (Saltanate Cafe) என்ற இடத்திற்குச் சென்றார். அங... மேலும் பார்க்க

காட்பாடி: மாற்றுத்திறனாளி இளைஞர் வெட்டிக் கொலை; சொத்துத் தகராறில் சொந்த தம்பியே வெறிச்செயல்?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பொன்னியம்மாள். இவர்களுக்கு தினகரன் (வயது 25), மயிலழகன் (23) என்று இரு மகன்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயப... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் சிக்கிய தங்ககட்டிகள்; தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி! - முழு பின்னணி

ராமநாதபுரம் அருகேயுள்ள முடுக்குத்தரவை ரோட்டில் கடந்த செப்டம்பரில் போதைப்பொருள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த ராமநாதபுரத்தைச் ச... மேலும் பார்க்க

சகோதரி கொலை வழக்கு: தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து குற்றவாளி சகோதரன் தற்கொலை

மும்பை அருகில் உள்ள நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(36). ஆட்டோ டிரைவரான நாகேஷ் தனது மனைவி ஜோத்சனாவிற்கு தனது சகோதரியின் கணவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக சந்தேகப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: நள்ளிரவு வாக்குவாதத்தில் லிவ்இன் பார்ட்னரை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்

புனேயில் ஏராளமான சாப்ட்வேர் கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்காக அதிக அளவில் வாடகை வீடுகள், லாட்ஜ்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஹிங்ஜேவாடி என்ற இடத்தில் இருக்கும் பி.ஜி.ஹோம் ஒன்றில் தங்கிக்கொண்டு... மேலும் பார்க்க