செய்திகள் :

'மீனவ சமூகத்தினருக்கு முன்னுரிமையில்லை..!' - தூத்துக்குடி திமுக-வில் வெடிக்கும் பஞ்சாயத்து!

post image

தூத்துக்குடி தி.மு.க-வில் சமூக பிரதிநித்துவம் இல்லையென புது பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. மாவட்டத்தில் த.வெ.க வளர்ச்சியை தடுக்க மீனவ சமூகத்தினருக்கு கட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது!

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் மீனவ சமூகத்தை சார்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், மீனவ சமூகத்தினருக்கான முக்கியத்துவமும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் தி.மு.க-வில் கிடைப்பதில்லை. தூத்துக்குடி தொகுதியில் 90,000 மீனவர்கள் வசித்துவரும் நிலையில் அந்த மாவட்ட எம்.எல்.ஏ-க்கள், மேயர், கட்சி மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் மாற்று சமூகத்தினர்தான் இருக்கிறார்கள்.

அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
அமைச்சர் ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

நீண்டகாலமாகவே கொதிப்பிலிருந்து மீனவ சமூக மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு அந்த சமூக வாக்குகள் சென்றுவிட்டன. தூத்துக்குடியில் வென்ற ஸ்ரீநாத்துக்கு த.வெ.க தலைமை மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியிருப்பதால் மீனவ சமூக மக்களுக்கு த.வெ.க பக்கம் சாய்ந்துவிட்டனர். இது தூத்துக்குடி தி.மு.க-வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது."

தொடர்ந்து பேசியவர்கள், "தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி-யின் நாடாளுமன்றத் தொகுதியில் இப்படியொரு சூழல் நிலவுவதை தி.மு.க தலைமையும் விரும்பவில்லை. தூத்துக்குடி தொகுதியை சிறப்பாக பார்த்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் தோல்வியடைகிறார் எனில் நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி வெல்வது சிக்கல்தான் என்ற கருத்தும் உருவாகியிருக்கிறது. திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் தோல்வியடையும் சூழல் எழுந்தபோது த.வெ.க நிர்வாகி அஜிதாவை தி.மு.க இணைத்து பிரசாரம் செய்ய வைத்தார். இறுதியில் 6 ஆயிரம் வாக்குகளில் வென்றார். எனவே சமூக பிரநிதித்துவத்தை உறுதிசெய்யும் பொருட்டு மீனவச் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மறுசீரமைப்பில் முன்னுரிமை வழங்கும் திட்டம் தயாராகி வருகிறது" என்றனர்

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்ட மீனவரணி நிர்வாகிகளிடம் பேசினோம், "தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் 70 வயதை கடந்துவிட்டதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார். தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை பெற அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களும் முயற்சித்து வருகிறார்கள். மீண்டும் மீண்டும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்காமல் திருச்செந்தூர் தொகுதியை உள்ளடக்கிய தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவியை மீனவச் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அவ்வாறு பிரதிநித்துவம் கொடுத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலும் தி.மு.க வெற்றிபெற முடியும்" என்றனர்.

'5 மாதங்களாக தமிழ்நாட்டின் GST வசூல் இறங்கு முகம்' - நிபுணர் கூறும் பொருளாதாரக் காரணம் என்ன?

கடந்த மே மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் மைனஸில் சென்றுகொண்டிருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மைனஸ் என்கிற கேள்வி எழுவது நியாயமானதே. இந்த வசூல் குறைவிற்கு ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் காரணங... மேலும் பார்க்க

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `இது அங்கன்வாடிக்கு அனுப்பப்படும் முட்டைதானே?' - இலவச முட்டைகள் வெளியில் விற்பனையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 215 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. 1,397 ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதே... மேலும் பார்க்க

"முதல்வர் விஜய்க்கு நீங்க கொடுக்கப்போற அடி மரண அடியாக இருக்கணும்!" - தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, இன்று தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காகப் பிரசாரம் மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். பிறகு பரப்புரை... மேலும் பார்க்க

மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வணிகப் பகுதியாக உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு இரவு நேரத்திலும் அவசர மருத்துவ சேவை தேவைப்படும் நிலையில், நள்ளிரவு நேரங்களில் ம... மேலும் பார்க்க

LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? - அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!

நாளை அக்டோபர் 1-ம் தேதி. நாளை முதல் இந்தியாவில் கவனிக்க வேண்டிய... அமலாக உள்ள முக்கிய நிதி விஷயங்களை இங்கே காணலாம். இந்திய ரிசர்வ் வங்கி மீட்டிங்இந்தியாவின் தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதம... மேலும் பார்க்க