செய்திகள் :

"மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல" - பகிரும் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன்

post image

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மைக்கேல்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

மைக்கேல் ஜாக்சனாக அவரது அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் நடித்திருக்கிறார்.

Micheal Jackson Biopic
Micheal Jackson Biopic

அந்தோணி ஃபுகுவா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளைக் கற்றுக்கொண்டபோது தான் சந்தித்த சவால்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் அவர், "மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல, அது ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு தாளமும் துல்லியமாகப் பொருந்த வேண்டும்.

அதைச் செய்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவரது கால்களின் வேகமும், அதே சமயம் உடல் மொழியில் இருக்கும் அந்த நளினமும் ஒரே நேரத்தில் வருவதுதான் கடினம்.

Micheal Movie
Micheal Movie

குறிப்பாக, மிக வேகமான பீட்களுக்கு ஏற்ப உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அசைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது.

ஒவ்வொரு பீட்டையும் மிகச் சரியாகப் பிடிக்க வேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது," என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Lee Cronin's The Mummy Review: `மம்மி'தான், ஆனால் இது `பாடி ஹாரர்' சினிமா! அச்சுறுத்துகிறதா படம்?

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படத்தொடர்களில் ஒன்றான `தி மம்மி'-யை 2017-ல் டாம் க்ரூஸை வைத்து ரீபூட் செய்தது ஹாலிவுட். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு `மம்மி'. `ஈவில் டெட் ர... மேலும் பார்க்க

The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்' - அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி?

கேலக்சியில் பல லூமாக்களை (நட்சத்திரங்கள் போல உருவம் கொண்டவை) தத்தெடுத்து வளர்க்கும் இளவரசி ரோசலினாவை ஜூனியர் பவுசர் கடத்துகிறார். ரோசலினாவின் சக்தி அனைத்தையும் உறிஞ்சி எடுத்து கேலக்சியை தன்வசப்படுத்த ... மேலும் பார்க்க

Project Hail Mary Review: சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் ஹாலிவுட் 'மெய்யழகன்' - ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகிறதா?

விண்வெளியில் நட்பிற்காக இருவர் செய்யும் தியாகங்களே இந்த 'ப்ராஜெக்டஹெய்ல் மேரி'. பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் கிரேஸ் (ரையன் காஸ்லிங்). 'ஆஸ்ட்ரோபேஜ்' எனப்படுகிற நுண்ணுயிரானது சூரியனை அழித்து... மேலும் பார்க்க