செய்திகள் :

விஜயதசமி கொண்டாட்டம்: வானைநோக்கி AK 47-ஆல் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி; நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

post image

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் அங்கிதா சர்மா. கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு, காவல் ஆயுதப் படையில் நடைபெற்ற 'சாஸ்திர பூஜை' நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். அப்போது, அவர் ஏகே-47 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்திப் பல முறை வானத்தை நோக்கிச் சுட்டார். சேலை அணிந்தபடி அவர் துப்பாக்கியால் சுடும் இந்தக் காட்சி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது.

துப்பாக்கியைக் கையாளும் அடிப்படைப் பாதுகாப்பு விதிகளை மீறி அங்கிதா சர்மா செயல்பட்டதாகவும், இந்த வீடியோ இணையத்தில் பரவி எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கியதன் மூலம் காவல் துறையின் கண்ணியத்திற்குப் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல் தலைமையகம் கவலை தெரிவித்துள்ளது.

அங்கிதா சர்மா
அங்கிதா சர்மா

மேலும் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என காவல்துறை அங்கிதா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இது குறித்து ராஜ்நந்த்காவ்ன் சரகக் காவல் துறை தலைவர் (ஐ.ஜி.) அஜய் யாதவ் கூறுகையில், ``எஸ்.பி. அங்கிதா சர்மாவிடமிருந்து விளக்கம் பெறப்பட்ட பிறகு, அது தொடர்பான எனது குறிப்புகளுடன் அறிக்கை காவல் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து வரும் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.விஜய், ``ஆயுத பூஜையின் போது ஆயுதங்களை வைத்து வழிபாடு செய்வதுதான் மரபே தவிர, அவற்றைப் பயன்படுத்திச் சுட வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற செயல்கள் தேவையற்ற விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.


அதேபோல், இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி கே.ஜே.எஸ். தில்லான் வெளியிட்ட பதிவில், `` தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியைப் பல்வேறு திசைகளில் திருப்புவது, பின்புறம் ஆள்கள் நிற்பது மற்றும் அரசு ஆயுதத்தை அனுமதியின்றி சுடுவது ஆகியவை கடுமையான பாதுகாப்பு விதிமீறல். இது உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்." என்றும் எச்சரித்துள்ளார்.

அங்கிதா சர்மா
அங்கிதா சர்மா

அதேவேளையில், பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரி கூறுகையில், ``சத்தீஸ்கரில் சாஸ்திர பூஜையின் போது ஆபத்தில்லாத 'வெற்று ரவைகளை' மட்டுமே பயன்படுத்திச் சுடுவது வழக்கமான ஒன்றுதான்." எனத் தெரிவித்திருக்கிறார்.

இன்னும் சிலர், ``அங்கிதா சர்மா ஒரு பயிற்சி பெற்ற அதிகாரி. அவர் சேலை அணிந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாலேயே பலர் இதை விமர்சிக்கின்றனர். துப்பாக்கியைக் கையாண்டதில் சிறு குறைகள் இருந்தாலும் அவரின் சிறப்பான பணிப் பதிவைச் சிறுமைப்படுத்தக் கூடாது." என என்றும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.

ராஜ்நந்த்காவ்ன் கூடுதல் எஸ்பி கீர்த்தன் ரத்தோரும் ஏகே-47 துப்பாக்கியால் சுடும் வீடியோ ஒன்று அடுத்தபடியாக வெளியாகியுள்ளது. இதுமட்டுமன்றி, ராய்ப்பூர், பிலாஸ்பூர், ராய்கர், துர்க், கபிர்தாம் மற்றும் பஸ்தார் ஆகிய பிற மாவட்டங்களிலும் ஆயுத பூஜைக்குப் பிறகு காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

குமரி: கல்லூரி மாணவிக்கு காரில் லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை; த.வெ.க நிர்வாகி மீது வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் உயிரை மாய்த்த விவகாரம்; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர், கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயார் வெட்டிக் கொலை: அப்பா, அண்ணன் படுகாயம்; இளைஞர் வெறிச்செயல்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு இரண்டு மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர். முத்துக்கிருஷ்ணனின் மூத... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "தாய் கொலை; கடத்தப்பட்ட மகள்கள்; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" - அன்புமணி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் - மேரி ரெஜிலா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்... மேலும் பார்க்க

போதைபொருள் விற்பனை: கேரள போலீஸில் கூட்டாக சிக்கிய தவெக, திமுக மாவட்ட நிர்வாகிகள்! என்ன நடந்தது?

கேரள மாநில காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஆன்டி-நார்கோடிக்ஸ் ஸ்குவாட் ஆகியவை இணைந்து 'ஆபரேஷன் தூஃபான்' என்ற பெயரில் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் விநியோக... மேலும் பார்க்க

காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் தஞ்சமான பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஸ்ரத்தா துபே. சோசியல் மீடியா பிரபலமான இவர் மேக்அப் கலைஞராகவும் இருக்கிறார். இவரது காதலன் சிவா சர்மா. இவர் பல்வேறு இடங்களில் உணவகங்கள் நடத்தி வந்தார். கடந்த ச... மேலும் பார்க்க