செய்திகள் :

போதைபொருள் விற்பனை: கேரள போலீஸில் கூட்டாக சிக்கிய தவெக, திமுக மாவட்ட நிர்வாகிகள்! என்ன நடந்தது?

post image

கேரள மாநில காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஆன்டி-நார்கோடிக்ஸ் ஸ்குவாட் ஆகியவை இணைந்து 'ஆபரேஷன் தூஃபான்' என்ற பெயரில் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை உடைக்கும் விதமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்ட தீவிர சோதனையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் எருமாடு பகுதியைச் சேர்ந்த நௌஃபல், கூடலூரைச்‌ சேர்ந்த முகமது நசீஃப் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் வயநாடு மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நௌஸாத் மற்றும் முகமது நசீஃப்

பின்னணி குறித்து தெரிவித்த வயநாடு காவல்துறையினர், " த.வெ.க கட்சி கொடி பொருத்திய ஃபார்ச்சூனர் கார் ஒன்றில் இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். பிறகு இவர்களைத் தேடி வந்த ஒருவர் போலீஸைக் கண்டதும் தானாவே பயந்து திரும்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் ஏற்பட்டது‌. அந்த இரண்டு நபர்களையும் பிடித்து விசாரித்ததில் தமிழ்நாட்டின் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில் முகமது நசீஃப் தவெகவின் நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளர் என்றும், நௌஸாத் திமுக வின் நீலகிரி மாவட்ட இளைஞர் அமைப்பாளர் என்றும் கூறினர். இருவரும் கூட்டு சேர்ந்தே தவெக கட்சி கொடி கட்டிய வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது மட்டுமின்றி விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று" வருகிறது.

காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் தஞ்சமான பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஸ்ரத்தா துபே. சோசியல் மீடியா பிரபலமான இவர் மேக்அப் கலைஞராகவும் இருக்கிறார். இவரது காதலன் சிவா சர்மா. இவர் பல்வேறு இடங்களில் உணவகங்கள் நடத்தி வந்தார். கடந்த ச... மேலும் பார்க்க

நாகை: சுற்றுலா வந்த இடத்தில் 2 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; 2 கேரள இளைஞர்கள் போக்சோவில் கைது

கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் ஒன்றாக வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அந்தக் குழுவில் 26 வயதுடைய அஜய், 23 வயதுடைய விஷால் ஆகிய இரண்டு இளைஞர்களும் வந்திருந்தனர். வெளிமாவட்டத்தைச் சேர்... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினரின் மகன் அகிலன் (16), கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அகிலன் நேற்று வீட்டில் தூக்கு போ... மேலும் பார்க்க

'எங்க மகளை மும்பை கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்து சென்றனர்' - கைதான பெண்களின் பின்னணி

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டதில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேவையான ஆயுதத்தை குற்... மேலும் பார்க்க

காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் திருவல்லா புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில் 8 மாதமே ஆன பெண் குழந்தையின் சடலம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ப... மேலும் பார்க்க

கோவையில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை; சாதிய வன்கொடுமையே காரணம் எனப் பெற்றோர் அதிர்ச்சி புகார்

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினருக்கு, நேத்ரா (19) என்ற மகளும், அகிலன் (16) என்ற மகனும் உள்ளனர்.அகிலன் கோவை –அவிநாசி சாலையில் உள்ள கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில்... மேலும் பார்க்க