செய்திகள் :

``உயர்கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து பள்ளிகளிலும் சாதியப் பாகுபாடு.!" - இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

post image

பள்ளிக் கல்விநிலையங்களில் தொடரும் சாதியப் பாகுபாடு, பாதிக்கப்பட்ட மாணவர் அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், ``கோயம்புத்தூர், பீளமேடு அருகே உள்ள அரசு உதவிபெறும் ஸ்ரீ கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த தலித் மாணவர் அகிலன், மாட்டிறைச்சி உண்பதைக் காரணமாகக் கொண்டு சக மாணவர்களால் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகிலன்

இதுகுறித்துப் பெற்றோரிடமும் வகுப்பாசிரியரிடமும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் காட்டிய அலட்சியம் அவரது தற்கொலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் நிலையில், தற்போது பள்ளிகளிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த மூன்று மாதங்களில் பள்ளிகளில் நிகழ்ந்துள்ள இரண்டாவது சம்பவமாக இதைக் காணும்போது, இது தனித்த நிகழ்வல்ல; மாணவர்களின் கல்விச்சூழலில் சாதியப் பாகுபாடு தொடர்ந்து நிலவுவதன் ஆபத்தான வெளிப்பாடு என்பதை உணர வேண்டும். எனவே, இப்பிரச்சினையை தவெக அரசு மிகுந்த தீவிரத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டும். இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து, விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழல் இருந்தும், இதுவரை அவர் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இவ்வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அகிலனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதையும் தவெக அரசு உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய இடங்கள். ஆனால், சாதியப் பாகுபாடு மாணவர்களின் கல்வி உரிமையையும் கண்ணியத்தையும் உயிரையும் அச்சுறுத்தும் நிலை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதியப் பாகுபாட்டைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது மட்டுமே போதுமானதல்ல.

அவற்றைச் செயல்படுத்த வேண்டிய ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகங்களும் சாதிய மனநிலையிலிருந்து விடுபட்டவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, இனி இதுபோன்ற சாதியப் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பள்ளிகளில் நிகழாமல் தடுப்பதற்கான உரிய வழிமுறைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"பாஜகவால் அடையாளம் பெற்றவர் பாஜகவை விமர்சிக்கிறார்" - மீண்டும் அண்ணாமலையைச் சீண்டும் வானதி சீனிவாசன்

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பா.ஜ.க-விலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பா.ஜ.க தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தே... மேலும் பார்க்க

போராட்டங்களால் தடுமாறும் தவெக மேலிடம்? புலம்பும் உளவுத்துறை; திணறும் போலீஸ்

தலைநகரான சென்னையில் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரங்களில் தவெக அரசின் 'மேலிடம்' தடுமாறுவதால் உளவுத்துறையினரும் போலீஸாரும் போராட்டங்களை முறையாக கையாள முடியாமல் திணறுவதாகக் கிசுகிசுக்கின்றனர்... மேலும் பார்க்க

``மத்திய அரசையோ மாநில அரசையோ விமர்சிக்கக் கூடாது" - அரசு ஊழியர்களுக்கு தவெக அரசு எச்சரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அ. சோமசுந்தரம் அனைத்து அலுவலர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அ... மேலும் பார்க்க

``8 ஆண்டுகள் உழைத்த பணத்தை வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" - அமைச்சர் கீர்த்தனா

விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனாவுக்குப் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று மாணவிகளுக்கு மத்தியில் உரைய... மேலும் பார்க்க

'மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கலாம்!' - மதுரை–குருவாயூர் ரயிலில் Vistadome பெட்டி | Photos

ரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டிரயிலில் விஸ்டாடோம் பெட்டி... மேலும் பார்க்க