போதைபொருள் விற்பனை: கேரள போலீஸில் கூட்டாக சிக்கிய தவெக, திமுக மாவட்ட நிர்வாகிகள்...
'விவசாயிகளுக்கு வெளிநாட்டுக்கு விவசாயச் சுற்றுலா' - கடுமையான வறட்சிக்கு இடையிலும் அறிவித்த மகா. அரசு
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
பீட் உட்பட சில மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இப்போதே குடிநீர் பிரச்னை ஏற்பட்டு டேங்கர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த வறட்சியிலும் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்து இருக்கிறது. மாநிலம் முழுவதும் 180 விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களை ரூ.4 கோடி செலவு செய்து வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டும் ரூ.2 கோடி செலவு செய்து விவசாயிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றனர். இந்த ஆண்டு லண்டனில் நடந்த ஏ.ஐ மாநாட்டில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர் உதய் சாமந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் வறட்சி நிலவும் நேரத்தில் ரூ.5 கோடி செலவு செய்து இந்தப் பயணம் தேவையா என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ரோஹித் பவார், ஆதித்ய தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அந்த மாநாட்டிற்கு மாநில தொழிற்துறை முதன்மை செயலாளர் அன்பழகன் தலைமையிலான குழு சென்றது.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வது குறித்து மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வெளிநாடுகளில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல், சந்தை தேவை மற்றும் விவசாய விளைபொருள் பதப்படுத்துதல் போன்ற அம்சங்களை விவசாயிகள் புரிந்துகொள்ளும் உதவும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
விவசாயிகள் இத்தகைய நடைமுறைகளைத் தங்கள் சொந்த நிலங்களில் செயல்படுத்த ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள விவசாயிகளுடன் நேரடியாக உரையாடுதல், களப்பயணங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் செல்லுதல் ஆகியவற்றின் மூலம், பல்வேறு நாடுகளில் உள்ள விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் அது சார்ந்த முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை விவசாயிகள் அறிந்துகொள்ளவும், அவர்களின் அறிவையும் திறனையும் மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவுகிறது. இத்திட்டம் 2004-05 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.2 கோடி செலவிட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ''2012 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், விமான டிக்கெட் கட்டணங்கள், வெளிநாடுகளில் தங்குவதற்கான செலவுகள் மற்றும் அது தொடர்பான பிற செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
டாலர் மற்றும் யூரோவிற்கு நிகரான ரூபாய்யின் மாற்று விகிதமும் அதிகரித்துள்ளது. இந்த உயர்வைக் கருத்தில் கொண்டு, ஒரு விவசாயிக்கான அதிகபட்ச மானிய வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.




















