செய்திகள் :

`விஜய்யைவிட நன்றாக நடனமாடுகிறேன்'- வி.டி.சதீசன் EB ஊழியர்களுடன் நடனமாடும் AI வீடியோ; நீக்கிய மெட்டா!

post image

​கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துவருகின்றனர். இந்த நிலையில் கேரள மின்வாரிய ஊழியர்களுடன் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உற்சாகமாக நடனமாடுவது போன்ற ஏ.ஐ வீடியோ அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. 'ஏ.ஐ காவலா' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ மூன்று நாள்களில் பல்வேறு சமூக வலைதளங்கள் வழியாக 7 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. திருச்சூரைச் சேர்ந்த அபிஜித் என்பவர் அந்த வீடியோவை கிரியேட் செய்து பகிர்ந்திருந்தார். அதை, `ஏ.ஐ வீடியோ' என்ற குறிப்புடன்தான் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த முதல்வர் வி.டி.சதீசன், "நன்றாக நடனமாடக்கூடிய மோகன்லாலை விடவும், எனது நண்பரும் நடிகருமான விஜய்யை விடவும் நான் மிகச் சிறப்பாக நடனமாடுவதுபோல இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இதைப் பார்த்துவிட்டு நானே ஆச்சர்யப்பட்டுப் போய்விட்டேன்" எனக் கூறியிருந்தார்.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்
கேரள முதல்வர் வி.டி.சதீசன்

இதற்கிடையே ​காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போலீஸில் புகார் அளித்தனர். ​ஒரு தனிநபரின் முன் அனுமதியின்றி, அவரது உருவத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்தி வீடியோ உருவாக்குவது சைபர் சட்டப்படி குற்றம் எனக் காவல்துறையின் சைபர் பிரிவு சுட்டிக்காட்டியது. ​இதற்கிடையே மெட்டா நிறுவனம் திடீரென அந்த வீடியோவை இந்திய பயனர்கள் யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கியது.

வி.டி.சதீசன் நடனமாடும் ஏஐ வீடியோ

இது குறித்து வீடியோவை வெளியிட்ட அபிஜித் கூறுகையில், "இந்த ​வீடியோவைப் பார்த்துவிட்டு முதல்வர் என்னை அழைத்துப் பாராட்டுவார் என்றே நான் நம்பியிருந்தேன்" எனக் கூறியதுடன், ​வீடியோ கட்டுப்படுத்தப்பட்ட தகவலை `ஏ.ஐ காவலா' இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஸ்டோரி வாயிலாக வெளிப்படுத்தினார். இதற்கிடையே கேரள போலீஸார் மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்தே அந்த வீடியோ முடக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதி : `வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்'- சீமான் ஆதரவு குரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்... மேலும் பார்க்க

`தரையில படுக்க வைக்கிறாங்க; கேவலமா ட்ரீட் பண்றாங்க’ - திருவண்ணாமலை ஜி.ஹெச் மீது கர்ப்பிணி புகார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், மகேப்பேறு வார்டில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதத... மேலும் பார்க்க

தாம்பரம்: ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு; மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

முதல்வர் விஜய்யின் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ 45,00,000 கூட்டு சதி டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்... மேலும் பார்க்க

'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' - கடிவாளம் போடுமா தலைமைகள்?

சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு கருத்து சுதந்திரத்தின் மீதான பாதுகாப்பைப் பற்றி பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க... மேலும் பார்க்க

`வெளியிலிருந்துதான் ஆதரவு' - இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' - ஜவஹர் அலி | களம் 02

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க