செய்திகள் :

"விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும்" - கனிமொழி சந்தோஷ்

post image

கோவை செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “பிக்பாஸ் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. நடிகர் விஜய் சேதுபதி இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார் என எனக்கு தெரியும். மகாராஜா திரைப்படம் நடிப்பதற்கு அவருடைய நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அவரது கட்டத்தைப் பார்த்து நான் கூறி இருந்தேன்.

அப்போது அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று கூறி இருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக இருந்தது. இந்த நூறு நாளில் சுமார் 80 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவார். எனவே சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கிறார்.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

அந்தத் தொலைக்காட்சியிடம் கேட்டபோது முதல்வரைக் குறிப்பிட்டு நாங்கள் பேசவில்லை என்று விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் ஓபன் ஆக சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலத்தான் என்று விமர்சித்தார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் விமர்சனம் யார் வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் பார்த்து பேச வேண்டும்.

அவர் பேசுவதால் இங்கு எந்த ஒரு விஷயமும் மாறப் போவது கிடையாது. எங்களுடைய அரசாங்கம் வெளிப்படையாக என்னென்ன நடக்கின்றன. அவர் என்ன செய்கிறார், எங்கு செல்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதல் கொண்டு வெளிப்படையாகக் கூறுகிறோம்.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் என்பது கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அவர் குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். எங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைப் பேச சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம், மக்கள் பதில் கூறுவார்கள். என்னைப் பொருத்தவரை இதை இன்னைக்குப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் அவருடைய பிழைப்பிற்காகச் செய்கிறார்.

சட்டசபை நடந்தபோது யாரும் நாடகம் கூட பார்க்கவில்லை. குழந்தைகள் முதல் கொண்ட அனைவரும் சட்டசபையைப் பார்க்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை, இதோடு விட்டால் நன்றாக இருக்கும். எங்களுடைய ஆட்சியைத் தற்போது கண்கூட மக்கள் பார்த்து விட்டார்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்துவிட்டது. எனவே இடைத்தேர்தலில் எங்கள் தலைவர் யாரை நிற்க வைக்கிறாரோ, அவர்தான் வெற்றியாளர்” எனத் தெரிவித்தார்

"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" - விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் நீண்ட கா... மேலும் பார்க்க

``நான் யாரா? சுயமரியாதையுடைய இம்மண்ணின் மைந்தன்" - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதில்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்காதவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியி... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி முறைகேடு: ``செயல்முறை குறைபாடா? அப்பட்டமான முறைகேடா?" - அறப்போர் இயக்கம் கேள்வி

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடு... மேலும் பார்க்க

போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை தேர்தலில் தோற்கடித்தவர் த.வெ.க-வின் வி.எஸ்.பாபு. வெற்றிப் பெற்றவுடன், 'its over' என்பதுபோல அவர் ... மேலும் பார்க்க

"அமைச்சர் பதவி கிடைத்ததால்தானே நீங்கள் கூட்டணி மாறினீர்கள்" - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி

விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு ய... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: "இடதுசாரிகள் தனித்துப்போட்டி என முன்பே சொல்லியிருந்தால்..." - சீமானின் திட்டம் என்ன?

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர... மேலும் பார்க்க