செய்திகள் :

"அமைச்சர் பதவி கிடைத்ததால்தானே நீங்கள் கூட்டணி மாறினீர்கள்" - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி

post image

விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, "நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளைக் குறைத்து, திடுமெனக் கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளைத் தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா?

நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணிக் கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம்தான் உள்ளது” என்று தேமுதிகவைச் சாடியிருந்தார்.

திருமாவளவன் - விஜய் சந்திப்பு
திருமாவளவன் - விஜய் சந்திப்பு

இந்நிலையில் இன்று (செப்.16) செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் திருமாவளவன் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "சகோதரர் வன்னிய அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதனால் நீங்கள் (விசிக) கூட்டணி மாறினீர்கள், இதுதானே உண்மை? கம்யூனிஸ்டுகளைப் போல் நீங்களும் இருந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்.

முடிவெடுக்க வேண்டியது திமுகவும் அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை அண்ணன் ஸ்டாலின் கூடுதல் இடமாகவே கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.

இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும்" என்று தெரிவித்திருக்கிறார்.

"தவெக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணிக்கு எந்தப் பங்கமும் வராது" - விஜய் வசந்த் எம்பி நம்பிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், "சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் நீண்ட கா... மேலும் பார்க்க

``நான் யாரா? சுயமரியாதையுடைய இம்மண்ணின் மைந்தன்" - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதில்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது, ``ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக ஏற்காதவர்களுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியி... மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி முறைகேடு: ``செயல்முறை குறைபாடா? அப்பட்டமான முறைகேடா?" - அறப்போர் இயக்கம் கேள்வி

தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அறப்போர் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடு... மேலும் பார்க்க

போனில் வந்த ஆதவ்; தினமும் முதல்வருக்கு அப்டேட்; எப்படி இருக்கிறார் கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு?

கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை தேர்தலில் தோற்கடித்தவர் த.வெ.க-வின் வி.எஸ்.பாபு. வெற்றிப் பெற்றவுடன், 'its over' என்பதுபோல அவர் ... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: "இடதுசாரிகள் தனித்துப்போட்டி என முன்பே சொல்லியிருந்தால்..." - சீமானின் திட்டம் என்ன?

சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர... மேலும் பார்க்க

"விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு விட்டால் நன்றாக இருக்கும்" - கனிமொழி சந்தோஷ்

கோவை செரையம்பாளையம் பகுதியில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் ப... மேலும் பார்க்க