செய்திகள் :

வெளிநாட்டில் தமிழ் ஆசிரியர் பணி; மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம்; எங்கே விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

post image

வெளிநாட்டில் உள்ள அயலகத் தமிழர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத் தற்காலிகத் தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை.

என்ன பணி?

தமிழ்மணம் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தற்காலிகத் தமிழ் ஆசிரியர் பணி.

எந்தெந்த நாடுகளில் பணி வாய்ப்பு?

கம்போடியா, இந்தோனேசியா, மலாவி, மியான்மர், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, மொரிஷியஸ், ரீயூனியன், குவாடலூப், மார்டினிக் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களில் தமிழ் ஆசிரியர்கள் பணியிடங்கள்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

அதற்காகத் தமிழக அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாகத் தமிழ் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்ப உள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மொழித் தகுதி மற்றும் இதர தகுதிகள்:

ஆங்கிலம் நன்கு எழுத, பேசத் தெரிந்த நபராக இருத்தல் வேண்டும். தமிழ் ஆசிரியர் பணிக்கு உண்டான தகுதியும், திறமையும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசித் தேதி:

விண்ணப்பங்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் www.tamilvu.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, 'இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை 600 025' முகவரிக்கு 30.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் தமிழ் ஆசிரியர்கள் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.1,25,000/- ஊதியமாக வழங்கப்படும்.

பயணச் சலுகை: பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவினம், விசா செலவினம், தங்குமிடச் செலவினங்கள் ஆகியன அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வழங்கும்.

கார் ஓட்டத் தெரியுமா? தமிழ்நாட்டில் Indian Post-ல் வேலைவாய்ப்பு; ரூ.63,000 வரை சம்பளம்; முழு விவரம்

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன பணி?தமிழ்நாட்டில் ஸ்டாப் கார் டிரைவர்.மொத்த காலிப்பணியிடங்கள்: 24வயது வரம்பு: 18-27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.... மேலும் பார்க்க

Career: ரயில்வேயில் Station Master பணி; ஆரம்ப சம்பளம் ரூ.35,000! டிகிரி படித்திருந்தாலே போதும்!

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்டேஷன் மாஸ்டர். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,215; சென்னையில் 119. வயது வரம்பு: 20-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)ஆரம்ப... மேலும் பார்க்க

Career: நேர்காணல் இல்லை, ரூ.21,000 சம்பளம்! 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; Railways-ல் வேலை!

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,688வயது வரம்பு: 18 - 30 (சில பிர... மேலும் பார்க்க

Career: ரயில்வேயில் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.35,000! டிகிரி போதும்; நேர்காணல் இல்லை; முழு விவரம்

இந்திய ரயில்வே அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டிக்கெட் மேற்பார்வையாளர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், சீனியர் கிளர்க் ஆகிய டெக்னிக்கல் அல்லாத... மேலும் பார்க்க