செய்திகள் :

`வெளியிலிருந்துதான் ஆதரவு' - இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!

post image

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுகந்தி- லட்சுமணன்
சுகந்தி- லட்சுமணன்

திமுக, அதிமுக, தவெக கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. இந்நிலையில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இடதுசாரி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கின்றன.

அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' - கடிவாளம் போடுமா தலைமைகள்?

சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு கருத்து சுதந்திரத்தின் மீதான பாதுகாப்பைப் பற்றி பெரும் கவலையில் ஆழ்த்துகிறது. நடிகர் விஜய் சேதுபதி தனியார் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க... மேலும் பார்க்க

சட்டமன்றம் 2026: `தனிப்பட்ட தாக்குதலை ஸ்டாலினே நடத்தியிருக்கிறார்; அதே பாணி.!' - ஜவஹர் அலி | களம் 02

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

``டைம் பாஸ் ஆக்டிவிட்டி; துப்பில்லாத ஆட்சி’’ - முதல்வர் விஜய் மீது கொந்தளித்த எம்.பி கதிர் ஆனந்த்

வேலூர் எம்.பி-யும் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கதிர் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது. தி.மு.க... மேலும் பார்க்க

`ஆஜராக வேண்டியவரே விசாரிப்பதா? மரபு மீறுவதில் திமுக ரூட்டில் தவெக‌' - முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் உரிமைக் குழு, சபை விதிகள் குழு, பொது நிறுவனங்கள் குழு உள்ளிட்ட 11 குழுக்களை நியமித்து உத்தரவிட்டார் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர். சட்டப்பேரவை விதி... மேலும் பார்க்க

"இது தான் தவெக சொன்ன மாற்றமா?" - தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிறது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: "கனத்த இதயத்துடன் ஏற்கிறோம்" - இடதுசாரிகளின் முடிவு குறித்து மாணிக்கம் தாகூர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (செப்.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது அவரிடம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்... மேலும் பார்க்க