செய்திகள் :

“ஸ்டாலின் ஆட்சியின் உயரங்களை 'ஸ்டிக்கர் மாடல்' அரசு வேடிக்கைதான் பார்க்க முடியும்” - TRB ராஜா

post image

திமுக ஆட்சியில் திட்டம் தொடங்கப்பட்டு, இன்று (அக்டோபர் 16) தவெக ஆட்சியில் கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை திமுகதான் தொடங்கி வைத்தது என்று திமுக சொந்தம் கொண்டாடுகிறது.

ஆனால், தவெகவோ, “இது ஒரு தனி மனிதரின் சிந்தனையும் உழைப்பும் கிடையாது” என்று திமுக சொல்லும் ‘ஸ்டிக்கர்’ குற்றச்சாட்டை மறுக்கிறது.

தவெகவின் மறுப்பு குறித்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “ரிப்பன் கட்டிங் எளிது... Institution-building?!…

அதற்கு வேற லெவல் லீடர்ஷிப் வேண்டும்.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்

அண்ணாந்து வேடிக்கை மட்டுமே...

கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டடத்தைத் திறந்து வைக்க ரிப்பன் வெட்டுவது எளிது.

ஆனால் ஒரு தலைமுறையின் அறிவை வடிவமைக்கும் நிறுவனத்தைக் கற்பனை செய்து, திட்டமிட்டு, நிதி ஒதுக்கி, கட்டியெழுப்புவதுதான் உண்மையான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் அடையாளம்.

அதனால்தான் திராவிட நாயகன் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி எட்டிய உயரங்களை, இன்றைய ஸ்டிக்கர் மாடல் அரசால் அண்ணாந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

ஹப் அண்ட் ஸ்போக் மாடல்

சென்னையில் கலைஞர் உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அறிவுப் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து, தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுரை, திருச்சி, கோவை எனத் தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கான கட்டமைப்பைப் பரவலாக்கினார்.

தலைவர் கலைஞர் சிறிய நூலகங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கினார். தலைவர் ஸ்டாலின் நூலகங்களை ஒரு ஹப் அண்ட் ஸ்போக் மாடல் முறையில் அனைவருக்கும் அனைத்துத் தரங்களிலும் நூலகச் சேவை கிடைக்கும்படி செய்தார்.

கோவை பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட திட்டம். இன்று அதை வேறு அரசு திறந்து வைக்கலாம்.

அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருவதால்...

ஆனால் இதே அளவிலான ஒரே ஒரு அறிவுசார் நிறுவனத்தையாவது இவர்கள் உருவாக்குவார்களா?

தவெக அரசு ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்கு முன்னால் வந்து கடுமையாக உழைத்தவர்களின் பணியை அங்கீகரிப்பதில் ஒரு கண்ணியம் இருக்கிறது.

தகுதியானவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் பாராட்டையும் தருவதால் தலைமைத்துவத்தின் பலம் கூடுமே தவிர, ஒருபோதும் குறையாது” என்று பதிவிட்டுள்ளார்.

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" - ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது எ... மேலும் பார்க்க

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியாக் கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இதன் ... மேலும் பார்க்க

தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்..." - அபிஜித் திப்கே

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளத... மேலும் பார்க்க

"ஸ்டாலின், விஜய் ரெண்டு பேருமே பாராட்டினாங்க" - பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னி பேட்டி

கோவையின் புதிய அடையாளமாக மாறியிருக்கும் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார். ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தை சென்னை கட்டடக்கலை நிபுணர் பொன்னி என்பவர்... மேலும் பார்க்க

10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்... டெண்டர் கோரிய தமிழ்நாடு காவல்துறை

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்றோரின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் பொருட்டு ட்ரோன்களை வீழ்த்தும் வகையில் ஆன்டி ட்ரோன் துப்பாக்கிகளை வாங்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ட்ரோன் கேமராதா... மேலும் பார்க்க