செய்திகள் :

Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக..." - 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்

post image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது 'ஓம்'.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

Mammootty - Dhanush
Mammootty - Dhanush

ஆனால், ரஜினியின் 'ஜெயிலர் 2' வருவதால் படத்தின் ரிலீஸைத் தள்ளி வைப்பதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "கடந்த ஆகஸ்ட் மாதமே தனுஷ் சார் என்னிடம் ரிலீஸ் பற்றிய இந்த விஷயத்தைச் சொன்னார். ரஜினி சாரின் திரைப்படமும் அதே காலகட்டத்தில் வெளியாவதால், அவருக்குக் கொடுக்கும் மரியாதையின் நிமித்தமாக நமது படத்தின் ரிலீஸைத் தள்ளிவைக்கலாம் என்று கூறினார்.

நாங்கள் ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட ரிலீஸ் தேதியை உறுதி செய்திருந்ததால், அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே மாற்ற முடியும் என்ற சூழல் இருந்தது.

 'ஓம்'
'ஓம்'

அப்படியிருந்தும், படத்தின் ரிலீஸைத் தள்ளிவைப்பதில் தனுஷ் சார் மிகவும் உறுதியாக இருந்தார். ஒரு திரைப்படத்திற்குச் சரியான ரிலீஸ் தேதியைத் தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது.

அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளியாகும் இந்தச் சூழலில், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் போதுமான அளவு திரையரங்குகளும் கவனமும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், படத்தின் ரிலீஸ் தேதியைப் பொறுத்தே எங்களது அடுத்தடுத்த வேலைகளுக்கான காலக்கெடுவும் தீர்மானிக்கப்படுகிறது" எனக் கூறியிருக்கிறார்.

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். JAILER Stillsவட இந்தி... மேலும் பார்க்க

Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக... மேலும் பார்க்க

"என் அனுமதி இல்லாமல் என் கதையை எப்படி எடுப்பார்கள்!" - வழக்கு தொடர்ந்த இயக்குநர் கோபி நயினார்

இயக்குநர் கோபி நயினார், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கருப்பர் நகரம்' படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தடைப்பட்டுத் தடைப... மேலும் பார்க்க

விசாரணை : அரசு எந்திரம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 33

`சினி'ஸ்கோப் 33விசாரணை”என்னைக் கஸ்டடியில் வைச்சிருக்கிறது நீங்கதான் மிஸ்டர் முத்துவேல். இப்ப நீங்கதான் பெரிய ஆள்” என்று இன்ஸ்பெக்டர் முத்துவேலைப் பார்த்துச் சொல்கிறார் கேகே. பதிலுக்கு,”நான் ஒரு சாதாரண... மேலும் பார்க்க

`தலைவர் படம் ரிலீஸ் என்றாலே திருவிழாதான்…' - மதுரையில் களைகட்டிய ஜெயிலர் 2 கொண்டாட்டம்!

ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 க... மேலும் பார்க்க

Jailer-2: "என் அப்பா திரையில் மீண்டும் ஒரு முறை அதிர வைத்திருக்கிறார்"- சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர... மேலும் பார்க்க