“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரச...
"ஸ்டாலின், விஜய் ரெண்டு பேருமே பாராட்டினாங்க" - பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னி பேட்டி
கோவையின் புதிய அடையாளமாக மாறியிருக்கும் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார்.
ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தை சென்னை கட்டடக்கலை நிபுணர் பொன்னி என்பவர் வடிவமைத்திருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் பொன்னி ஆஸ்கர் திருச்சியில் உள்ள என்.ஐ.டி. கல்லுாரியில் படித்தவர்.
தெலங்கானாவில் அம்மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்திருக்கிறார்.

இந்நிலையில் பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னியிடம் வாழ்த்தைக் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம்.
இந்தத் திட்டத்தை வடிவமைக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய பொன்னி, "மாநில அரசு அறிவுலகம் வடிவமைக்க போட்டி ஒன்றை நடத்தியது. 20 வடிவமைப்பாளர்கள் அதில் பங்கேற்றோம்.
எனது கணவரும் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தார். பல பிரபல கட்டடக் கலைஞர்களுடன் போட்டியிட்டதில் எனது வடிவமைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஒரு புத்தகம் திறந்திருப்பதுபோல் கட்டடத்தை வடிவமைத்திருக்கிறோம். இதுமட்டுமின்றி, ரூ.1,200 கோடி மதிப்பில் 12 லட்சம் சதுர அடியில் அமைந்த தெலங்கானா தலைமைச் செயலகத் திட்டத்திற்கான போட்டியிலும் நானும் பங்கேற்றிருக்கிறேன்.
30 கட்டடக் கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த 12 மாதப் போட்டியின் முடிவில் எனது வடிவமைப்பு தேர்வானது.அதை வெறும் 26 மாதங்களிலேயே கட்டி முடித்தோம்.
அமெரிக்காவில் படித்துப் பணியாற்றிய அனுபவம் இது போன்ற மிகப்பெரிய கட்டடங்களை உருவாக்க எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ஆந்திர அரசு திட்டங்கள், சாஃப்ட்வேர் பூங்காக்கள் மற்றும் தெலங்கானாவில் ரூ.1,000 கோடி மதிப்பிலான 5 பள்ளிகள் எனப் பல அரசுத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது ஒரு ஆட்சியும், திறக்கப்பட்டபோது வேறு ஆட்சியும் இருக்கிறது. ஆனால் திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் தற்போதைய முதல்வர் இருவருமே எனது வேலையை மிகவும் பாராட்டி ஆதரவு அளித்தனர்.
மருத்துவர்களுக்கு நோயாளி யாராக இருந்தாலும் சிகிச்சை அளிப்பதே கடமை என்பது போல், நாங்களும் அரசியல் கடந்து நாட்டிற்குச் சேவை செய்பவர்கள். எனது கட்டடக்கலைத் திறனை வெளிப்படுத்த அரசாங்கம் ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தது. நாட்டிற்குச் சேவை செய்வதே எனது முதன்மை நோக்கம்" என்றார் நெகிழ்ச்சியாக...
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












