செய்திகள் :

2026 அதிசார குருப்பெயர்ச்சி `ஜன்ம குரு’ சிம்ம ராசிக்கு பரிகாரம் தேவையா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

post image

நவகிரகங்களில் முழு முதல் சுபகிரகமான குருபகவான் கோசாரப்படி, அதாவது சந்திர ராசிக்கு 2, 5, 7, 9, 11 -ம் இடங்களில் உலவும்போது சுப பலன்களைத் தருவார். 1, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் உலவும்போது கெடுபலன்களைத் தருவார்.

அதிசார குருப்பெயர்ச்சி

4, 10-ம் இடங்களில் உலவும்போது 50% நற்பலன்களையும் 50% கெடுபலன்களையும் தருவார் என்பார்கள். உடனே, அதீத பயத்துக்கு நாம் ஆளாக வேண்டியதில்லை. கிரகங்களின் சஞ்சாரங் கள் நம் முன் வினைகளுக்கு ஏற்பவே பலன்களைத் தரும். ஆகவே, அவரவர் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பலன்களை அறியவேண்டும். உரியபடி பரிகாரங்களைச் செய்து வணங்கலாம். இறையருள் துணை இருந்தால், கோள்கள் தரும் பாதிப்புகள் குறையும்.

பொதுவாக 1, 3, 10, 4, 6, 12 ஆகிய இடங்களில் கோசாரப்படி குரு உலவும்போது பாதிப்புகள் உண்டாகலாம் எனும் விதிகள் சொல்லப்பட்டாலும், மேற்படி ஸ்தானங்களில் இருக்கும்போதும் சில நற்பலன்கள் ஏற்படவே செய்கின்றன.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி?

இந்த அதிசார குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் குரு இருந்தால், சுப பலன்களைத் தருவார் என்ற குறிப்புகளும் உண்டு.

ஜன்ம குருவாக இருந்தாலும் மேஷத்துக்கு 9-ம் வீட்டோன் என்ற வகையிலும், கடகத்துக்கு 9-ம் வீட்டோன், சிம்மத்துக்கு 5-ம் வீட்டோன், விருச்சிகத்துக்கு 5-ம் வீட்டோன், தனுசுக்கு ராசி அதிபதி, மீனத்துக்கு ராசி அதிபதி என்கிற வகையிலும் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சுபல பலன்களைத் தருவார். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்; உடல் நலம் சீராகும்.

நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். ஜன்ம ராசியில் இருக்கும் போது, குருவானவர் 5, 7, 9-ம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால், மக்கள் நலம், வாழ்க்கைத்துணை நலம், தந்தை நலம் ஆகியவையும் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். ஜன்ம குரு, ஜன்ம நட்சத்திரத்துக்குச் சாதகமான நட்சத்திரத்தில் உலவும்போது, சுப பலன்களைத் தருவார்.

சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் எனக் கொள்வோம். அவருக்கு ஜன்ம குருவானவர், 2-வது நட்சத்திரமான பூர நட்சத்திரத்தில் உலவும் நேரத்தில் சுப பலன்களைத் தருவார். அதாவது, ஒருவரது ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9வது நட்சத்திரங்களில் குரு மட்டுமல்லாது, எந்தக் கிரகங்கள் உலவினாலும் சார பலம் பெற்று நன்மை தரும் என்பது விதி.

ஆகவே இந்த அதிசாரப் பெயர்ச்சியில் `ஜன்ம குருவாயிற்றே என்ன ஆகுமோ’ என்று சிம்ம ராசி அன்பர்கள் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏற்கெனவே சொன்னது போல குரு பார்வை பலன்களும் சாதகமான பலன்களைத் தரும்.

5 விஷயங்கள்

5 விஷயங்களில் கவனம் செலுத்தினால் சிறப்பு!

உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டைக் குரு பார்ப்பதால், பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். அவர் களால் சமூகத்தில் மதிப்பு உயரும். பிள்ளை இல்லாத தம்பதிக்கு அந்தக் குறை நீங்கும்.

குருவின் பார்வை 7-ம் வீட்டில் விழுவதால் திருமணத்துக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு மண யோகம் கூடிவரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணவரவு உண்டாகும். பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தந்தை மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியமும் உண்டாகும். பணியில் புது பொறுப்புகள் வந்து சேரலாம்.

நீங்கள் கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்; பாதிப்புகளை விலக்கலாம்.

1. இந்த ஜென்ம குரு காலத்தில் எதிலும் அவசரம் கூடாது. நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

2. முதலீடுகளில் அகலக்கால் வைக்கக் கூடாது. அனுபவம் இல்லாத துறைகளில் இறங்கக்கூடாது.

3. புதியவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சில விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது சிறப்பு.

4. உடல்நலம், பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் அலட்சியம் கூடாது. பிரச்னை சிறியதாக இருக்கும்போதே அதைத் தீர்க்கப் பாருங்கள்.

5. பொது இடங்களில் வீண் வாக்குவாதம், விமர்சனங்களைத் தவிர்த்து விடுங்கள்!

நன்மை தரும் குரு வழிபாடு!

நவகிரகங்களில் குருபகவானுக்கு, வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். ‘கும் குருப்யோ நம:’ என்று சொல்லி மனதார அவரை வழிபடுங்கள்.

அதேபோல், `குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:’ என்ற செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். நன்மைகள் நம்மைத் தேடி வரும்.

அதேபோல் அண்டசராசரத்துக்கும் குருவாக விளங்கும் ஆலமரச்செல்வனாம் தட்சிணாமூர்த்தி சுவாமிக்குக் கொண்டைக் கடலை சுண்டல் சமர்ப்பித்து வழிபடுங்கள். எளியோர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். சிவாலய திருப்பணிகளுக்கு இயன்ற பங்களிப்பை வழங்குங்கள். பாதிப்புகள் நீங்கும்; குருவருள் கோடி நன்மைகளைக் கொடுக்கும்.

உங்கள் பிறந்த தேதி சொல்லும் அதிர்ஷ்ட ரகசியங்கள்! எந்த திசை, எண், நவரத்தினம் உங்களுக்கு யோகம் தரும்?

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விசேஷமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு த... மேலும் பார்க்க

2026 அதிசார குருப்பெயர்ச்சி: அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளுக்கும் குரு பார்வை பலன்கள்

அக்டோபர் 31 - ம் தேதி அதிசாரமாக கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் குருபகவான். 25.1.2027 அன்று மீண்டும் கடகத்துக்கு வருகிறார். இந்த அதிசார குருப் பெயர்ச்சியில் குரு பார்வையால் 12 ராச... மேலும் பார்க்க

இந்த வருடம் சரஸ்வதி பூஜை நாளுடன் இணையும் சூட்சும சக்தி நிறைந்த அபிஜித் நட்சத்திரம்... என்ன விசேஷம்?

அபிஜித் - 28-வது நட்சத்திரம் என்று சிறப்பிப்பார்கள். காலச் சக்கரத்தில் இது மகர ராசியில் - நட்சத்திரங்களில் உத்திராடம் மற்றும் திருவோணத்துக்கு இடையே சூட்சுமமாக வரக்கூடியது. `இதன் தேவதை ப்ரஜாபதி’ என்கிற... மேலும் பார்க்க

பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 19 முதல் 25 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப... மேலும் பார்க்க

கோதுமை உருண்டை முதல் குளிகை நேரம் வரை... கடன் தீர முனைவர் கே.பி.வித்யாதரன் சொல்லும் 4 பரிகாரங்கள்!

ஒருவரின் வாழ்வையே புரட்டிப்போட்டுவிடுவது கடன் பிரச்னை. `சின்ன தொகைதானே’ என்று வாங்கிய கடன், மலை அளவு உயர்ந்து கழுத்தை நெரிக்க... மனிதர்கள் படும் பாட்டைச் சொல்லி மாளாது!கடன் பரிகாரங்கள்பொதுவாக ஒருவரின்... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் : அக்டோபர் 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள்நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க