செய்திகள் :

புதிய பேருந்து நிழற்குடை கோரும் மக்கள் - நாச்சியாபுரத்தில் சீரமைக்கப்படுமா?

post image

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது நாச்சியாபுரம்.

சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் காவல் நிலையம், வங்கி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான மையமாக இந்த ஊர் விளங்குகிறது.

இங்குள்ள பேருந்து நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேரில் சென்று பார்வையிட்டபோது, நிழற்குடையின் மேல் செடி, கொடிகள் படர்ந்து காணப்பட்டன. சாலையின் தரைமட்டத்தைவிடக் கீழே இறங்கிய நிலையில் நிழற்குடை உள்ளது. உள்ளே குப்பைகள் குவிந்து, நிழற்குடையா அல்லது குப்பைக் கூடமா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு உள்ளது. யாரும் உள்ளே செல்ல நினைக்கக்கூட முடியாத நிலை நிலவுகிறது. மேற்கூரையும் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.

நிழற்குடை பயன்பாட்டில் இல்லாததால், பேருந்தில் ஏறவும் இறங்கவும் பொதுமக்கள் அருகில் உள்ள மரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில், "இந்த நிழற்குடை கட்டிய புதிதில் நன்றாகத்தான் இருந்தது. மக்கள் அதில் அமர்ந்துதான் பேருந்துக்குக் காத்திருப்பார்கள். சாலையைவிடப் பள்ளத்தில் அமைந்துள்ளதால், மழை பெய்யும்போது மண் முழுவதும் உள்ளே புகுந்துவிட்டது. அதனால் பயன்பாடு நின்றுவிட்டது. 15 ஆண்டுகளாக இதே நிலைதான்.

இந்த வழியாக அனைவரும் சென்றுவருகின்றனர், ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை. பேருந்து எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் உள்ளே புகுந்து குளம்போல் ஆகிவிடும். மிகவும் சிரமமாக உள்ளது" என வேதனையுடன் தெரிவித்தார்.

நாச்சியாபுரம் மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராம மக்களும் பேருந்தில் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு இந்த நிழற்குடையை மறுசீரமைத்துப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தர வேண்டும் அல்லது புதிய நிழற்குடை கட்டித்தரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

'விடிவதற்குள் தேங்கிய நீர் வடிந்துவிட்டது; திமுக அரசின் சரித்திரம் இது.!'- கே.என் நேரு

திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று முன்னாள் நகராட்சி ... மேலும் பார்க்க

`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். மனுவில் அவர், ... மேலும் பார்க்க

Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

சென்னை அம்பத்தூரில் முருகன் திரையரங்கில் ஜெயிலர் 2 படத்துக்கு இடையில் ரஜினி ரசிகர்களை குஶுப்படுத்த திரையிடப்பட்ட மேஷ் அப் வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. சமூகவலைதளங்களில் விஜய் ரசிக... மேலும் பார்க்க

'தவெக அரசின் கீழ்தரமான அரசியல்; வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை'- கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீ... மேலும் பார்க்க

ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதியில் குப்பைகளால் நிரம்பும் சாக்கடை: பொதுமக்கள் அவதி!

ஈரோடு மணிக்கூண்டு அருகே உள்ள கொங்கலம்மன் கோயில் வீதியில் சாக்கடை முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்களும் கடைக்காரர்களும் புகார் தெரிவிக்கின... மேலும் பார்க்க