புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமியின் கொலை - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் க...
`400+ எனும் ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம்!' - மெகா சேஸிங் ரகசியம் பகிரும் கில்
நேற்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியா ஒரு" Historical" நிகழ்வை நிகழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் 'சுப்மன் கில்' அடித்த இரட்டைசதம்.
போட்டியின் பிறகு சுப்மன் கில் களத்தில் இருந்த சூழலை பற்றி விளக்கி பேசினார். அவர் கூறியதாவது,
"வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 400-க்கும் மேற்பட்ட ரன்கள் கொண்ட இலக்கை சேஸ் செய்யும் போது ஆரம்பத்தில் சற்று அழுத்தம் இருந்தது. மைதானம் சற்று சின்னதாக இருந்தாலும் 400 ரன்களை துரத்துவது சாதாரண விஷயம் இல்லை..! ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆனா எனக்கும் ரோஹித் - க்கும் அந்த ப்ரஷர் இருந்தது.

இந்த ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம், 400 ரன்களை இரண்டாக பிரிச்சோம். 25 ஓவர்கள் முடிவில் நாங்கள் சுமார் 200-210 ரன்களை எடுக்க நினைத்தோம், ஆனால் நாங்கள் சுமார் 230-240 ரன்களை எடுத்திருந்தோம். அதன்பின், அழுத்தம் எங்கள் மீது இல்லை. அது அவர்கள் மீது பற்றிக்கொண்டது. இன்னிங்ஸின் பாதியில் சுமார் 240 ரன்களை எட்டியதும் அந்த கவலைகள் முற்றிலும் நீங்கின.
முதலில், பவர்-பிளே (முதல் 10 ஓவர்கள்) கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் 75-80 ரன்களை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு இலக்கை வைத்திருந்தோம். ஆனால் பந்து கொஞ்சம் தேய்மானம் ஆனதும் பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக மாறும் என்பது எங்களுக்குத் தெரியும்.
முதல் போட்டியைப் போலவே, ஆரம்பத்தில் பவர்-பிளே கட்டத்தில் நாங்கள் அவ்வளவு சிறப்பாகப் பந்துவீசவில்லை என்று நினைத்தேன். அவர்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் 420-430 ரன்கள் வரை கூட எடுக்கக்கூடும் என்று தோன்றியது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் ரன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி 20-30 ரன்கள் வரை குறைத்தது ஒரு கூடுதல் சாதகமாக அமைந்தது.

என் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தசைப்பிடிப்பு (cramp) ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். மதிய வேளையில் வெயில் மிகக் கடுமையாக இருந்தபோது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது, 13 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், நாங்கள் 25 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது." என்றார்
இந்தத் தொடரில் இதுவரை பேட்டிங் அல்லது பந்துவீச்சு செய்ய வாய்ப்பு கிடைக்காத சில வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் நிர்வாகம் வாய்ப்பளிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.





















