செய்திகள் :

Anirudh: 'ஆஹா கல்யாணம்...' - அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; எங்கே? எப்போது? வெளியான தகவல்

post image

இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது அத்தகவல் உறுதியாகி இருக்கிறது.

அனிருத்
அனிருத்

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு வருகிற நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. திருமண தேதி குறித்தான உறுதியான விவரங்களை இன்னும் தெரியப்படுத்தவில்லை.

திருமண வரவேற்பு நடக்கவிருப்பது குறித்த தகவலை தெலங்கானாவின் முதல்வர் அலுவலகம் பகிர்ந்திருக்கிறது.

கலாநிதி மாறனும், அவருடைய மனைவி காவேரி மாறனும் நேற்றைய தினம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவருடைய இல்லத்தில் சந்தித்து இந்த நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.

அதனுடைய புகைப்படங்களைத் தெலங்கானா முதல்வர் அலுவலகம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. இந்தச் சந்திப்பு குறித்து தெலங்கானா முதல்வர் அலுவலகம், "சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி மாறன் தம்பதியினர் தெலங்கானா முதலமைச்சருக்கு நேரில் அழைப்பு.

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தெலங்கானா மாநில முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர்.

அப்போது, தங்களது மகள் காவ்யா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பிதழ் வழங்கினர்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்கள்.

Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக..." - 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இப்படம்... மேலும் பார்க்க

Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?

நடிகர் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். JAILER Stillsவட இந்தி... மேலும் பார்க்க

Jailer 2: "அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது!" - நடிகை அபெக்ஷா போர்வல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக... மேலும் பார்க்க

"என் அனுமதி இல்லாமல் என் கதையை எப்படி எடுப்பார்கள்!" - வழக்கு தொடர்ந்த இயக்குநர் கோபி நயினார்

இயக்குநர் கோபி நயினார், ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கருப்பர் நகரம்' படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தடைப்பட்டுத் தடைப... மேலும் பார்க்க

விசாரணை : அரசு எந்திரம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 33

`சினி'ஸ்கோப் 33விசாரணை”என்னைக் கஸ்டடியில் வைச்சிருக்கிறது நீங்கதான் மிஸ்டர் முத்துவேல். இப்ப நீங்கதான் பெரிய ஆள்” என்று இன்ஸ்பெக்டர் முத்துவேலைப் பார்த்துச் சொல்கிறார் கேகே. பதிலுக்கு,”நான் ஒரு சாதாரண... மேலும் பார்க்க

`தலைவர் படம் ரிலீஸ் என்றாலே திருவிழாதான்…' - மதுரையில் களைகட்டிய ஜெயிலர் 2 கொண்டாட்டம்!

ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 கொண்டாட்டம்ஜெயிலர் 2 க... மேலும் பார்க்க