செய்திகள் :

Appa Kutty Review: அப்பா - மகள் பாசக்கதையில் மருத்துவ மற்றும் உறவுச் சிக்கல்கள்! நெகிழ வைக்கிறதா?

post image

சென்னையிலிருந்து கைக்குழந்தையான மகளோடு ஊட்டிக்கு வரும் சூர்யா (விஜய் ஆண்டனி), லொக்கேஷன் மேனேஜராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஒற்றையாளாகத் தன் மகள் தியாவை (லிதன்யா) வளர்க்கும் சூர்யாவைப் பார்த்து, தியாவின் பள்ளி ஆசிரியர் அனிதாவிற்கு (ப்ரீத்தி அஸ்ரானி) அவர்மீது காதல் வருகிறது. அதை சூர்யா ஏற்க மறுக்கிறார்.

அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review
அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review

இந்நிலையில், தியாவிற்கு ஒரு பெரிய பிரச்னை வர, அதைத் தொடர்ந்து, சூர்யா மறைக்கும் மர்மங்களும் அவிழத் தொடங்குகின்றன. தியாவிற்கு என்ன பிரச்னை, சூர்யா யார், அனிதாவின் காதல் என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது மு.மாறன் இயக்கியிருக்கும் 'அப்பா குட்டி'.

மர்மத்தை மறைத்து வைத்திருக்கும் அப்புரானிக் கதாபாத்திரத்திற்கு விஜய் ஆண்டனியின் ஒரே மாதிரியான சாந்தமான முகம் கைகொடுத்திருக்கிறது என்றாலும், காதல், ஆக்ஷன், ஆற்றாமை, பாசம் போன்றவற்றுக்கும் அதே சாந்தமான முகபாவனையே நீடிப்பது மைனஸாகவும் மாறியிருக்கிறது. காதல், அன்பு, துடுக்குத்தனம், பொறுமை எனப் பொறுப்பான கதாநாயகி கதாபாத்திரத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கச்சிதம்.

அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review
அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review

முதற்பாதியில் விளையாட்டுத்தனத்தால் கவரும் சிறுமி தியா, இரண்டாம் பாதியில் எமோஷனான காட்சிகளில் ஏனைய முதன்மைக் கதாபாத்திரங்களைப் பின்னுக்குத்தள்ளி ஸ்கோர் செய்கிறார். ஒன்லைன்களால் இரண்டாம் பாதியில் கலகலப்பூட்டுகிறார் முருகானந்தம். ஹரிப்ரியா எமோஷன் காட்சிகளுக்குக் கைகொடுக்க, அருவி மதன், பகவதி பெருமாள், ஜென்சன் ஆகியோர் சொன்னதைச் செய்திருக்கிறார்கள்.

ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, நீலகிரியின் வனப்பை முதல் பாதியின் நிதானத்திற்குப் பலமாக்கியிருக்கிறது. ஆனால், நேர்த்தியில்லாத சில கோணங்களும், கோவையில்லாமல் துண்டுதுண்டாக நிற்கும் விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் மேம்போக்கான திரைமொழியையே தந்திருக்கின்றன. விஜய் ஆண்டனியின் இசையில், 'நீதான் என் கண்ணாடி', 'அப்பாவ போல' பாடல்கள் கதைக்கருவைப் பேசுகின்றன. ஆனால் புதுமையில்லாத அவரின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்க்கவில்லை.

அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review
அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review

அப்பாவி விஜய் ஆண்டனி, அவருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம், அப்பா - மகள் பாசம், ப்ரீத்தி அஸ்ரானியின் காதல் என முதல் பாதி முழுவதுமே எந்த ஏற்ற இறக்கங்களும், புதுமையும் இல்லாமல் நேர்க்கோட்டில் நடைபோடுகிறது. ஏற்கனவே கடத்தப்பட்ட 'அப்பா' எமோஷன்களை மீண்டும் மீண்டும் வெவ்வேறு காட்சிகளில் பேசுவது அயர்ச்சி. மேலும் மேம்போக்கான திரையாக்கமும் கை கோக்க, ஊட்டிக்கு நடந்தே போன அலுப்பைத் தருகிறது முதல் பாதி. இடைவேளையில் சில அதிரடி திருப்பங்களைத் தரும் படம், நம்மை எழுந்து உட்கார வைக்கிறது.

பின்கதைகள், எமோஷன்கள், திருப்பங்கள், அதிர்ச்சிகள் என விரிகிறது இரண்டாம் பாதி. உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், மருத்துவச் சவால்கள், சட்டப்போராட்டம் என ஒவ்வொரு கிளைகளாகத் தாவும் திரைக்கதை, சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் புதிய திருப்பங்களும், சவால்களும் வரிசைக்கட்டுகின்றன.

அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review
அப்பா குட்டி விமர்சனம் | Appa Kutty Review

ஆனாலும், அவை அனைத்துமே அவசர அவசரமாக ஓடுவதும், முக்கியத் தருணங்களில் தலைதூக்கும் 'க்ளிஷே'க்களும் உணர்வுபூர்வமான தருணங்களைத் தளர்த்திவிடவே செய்கின்றன. உணர்ச்சிப்போராட்டத்தைப் பேசும் இறுதிக் காட்சி அழுத்தம் கூட்டினாலும், அதில் சில 'க்ளிஷே'த்தனங்கள் எட்டிப் பார்க்கவும் செய்கின்றன. நீதிமன்றத்தில் இப்படியெல்லாம் நாடகம் நடக்கும் வரை நீதிபதி பொறுத்திருப்பாரா என்பதெல்லாம் இயக்குநருக்கே வெளிச்சம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, மருத்துவச் சவாலோடு உணர்ச்சி மோதலையும் கதையாக்கியது கவனிக்க வைத்தாலும், அதை மேம்போக்கான திரைமொழியில் பேசியது ஏமாற்றத்தையே தருகிறது.

O.M Review: பிரமாண்ட செம்மரக் கடத்தல் உலகம்; களமிறங்கும் உளவாளி தனுஷ்! மிஷன் சக்சஸா?

செம்மரக் கடத்தல் குழுவை ஒட்டுமொத்தமாகப் பிடிக்கும் தடுப்புப் பிரிவுக்குச் சிறப்புக் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் நித்யா ரெட்டி (சாய் பல்லவி). இதற்காக 'O.M' (Operation Mole) எனப்படுகிற ஆபரேஷனைத... மேலும் பார்க்க

ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநரின் பேத்தியை மணந்தார் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஸ்வின்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அஸ்வின் குமார். இதனைத்தொடர்ந்து கதாநாயகனாக ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் நடித்தார். தவிர ‘செம்பி’, ‘ஓ காத... மேலும் பார்க்க

``அவருடைய சிந்தனைகளே என்னை ஊக்கப்படுத்தின" - TIME 100 Next India பட்டியலில் இடம்பெற்றது பா.ரஞ்சித்

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'டைம்' (TIME) இதழ், தனது 103 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான பிரத்யேக சர்வதேசப் பட்டியலான 'டைம் 100 நெக்ஸ்ட் இந்தியா' (TIME100 Next India) பட்டிய... மேலும் பார்க்க

Dhanush: "நான் Chef ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்; ஆனால்..." - தனுஷ் ஷேரிங்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்று (நவ.19) 'CNN-News18' ஊடகம் நடத்திய விருது விழாவில் 'Indian Of The Year 2026' விருது தனுஷிற்கு வழங்கப்பட்டிருக... மேலும் பார்க்க

OM: ``'ஓம்' என்று தலைப்பு வைக்கக் காரணம் இதுதான்"- ராஜ்குமார் பெரியசாமி

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. செம்மர கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை... மேலும் பார்க்க