செய்திகள் :

Asian Games Badmintonல் வெண்கலம் வென்ற மன்னார்குடி வீரர்; "அடுத்த இலக்கு ஒலிம்பிக்"- தந்தை நம்பிக்கை

post image

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். பேட்மிண்டன் வீரரான இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார்.

ஜப்பான் ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிஹரன்
ஜப்பான் ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிஹரன்

ஆண்கள் பிரிவில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் களமிறங்கிய ஹரிஹரன் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். திருவாரூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த ஹரிஹரனைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ஹரிஹரன் மட்டுமின்றி அவரது பெற்றோர் அம்சகர்ணன்- சத்யாவும் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர்.

இது குறித்து அம்ச கர்ணன் பேசுகையில், "என் மகன் இந்திய நாட்டிற்காக விளையாடி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

எங்க மகன் ஹரிஹரனுக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். சின்ன வயதில் இருந்தே ஹரிஹரனுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம்.

இதற்காகத் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தான். கடந்த 2017-ஆம் ஆண்டு ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ஹரிஹரன் வெற்றி பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

ஹரிஹரன் குடும்பத்தினர்
ஹரிஹரன் குடும்பத்தினர்

மேலும், தேசிய அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு சார்பில் ஹரிஹரன்–ரூபன் ஜோடி பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வரும் ஹரிஹரன், இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ள என் மகன், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காகப் பங்கேற்று பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும், பிறந்த ஊர் மன்னார்குடிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. இதுதான் அவனுடைய அடுத்த இலக்கு" என்றார்.

மன்னார்குடியில் இருந்து சென்று சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றுள்ள ஹரிஹரனுக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Asian Games: வெயிட்லிஃப்டிங், சாஃப்ட் டென்னிஸில் பதக்கங்களை குவித்த இந்தியா - ரவுண்ட்அப்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5-வது நாள் முடிவில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவாகியுள்ளன. வெயிட்லிஃப்டிங் பிரிவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம்... மேலும் பார்க்க

Asian games: 28 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம்; வரலாற்று சாதனை படைத்த மீராபாய்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் 28 ஆண்டுக்கால காத்திருப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு!ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

Asian Games: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி... முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை 3-வது நாளில் புதிய வேகம் எடுத்துள்ளது. இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்க... மேலும் பார்க்க

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றி - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 11 ஆண்டுகள் மார்க் வுட் விளையாடியிருக்கிறார். 201... மேலும் பார்க்க

ஜாகீர் கான்: ஸ்டார் வீரர் டு Mentor டு ஹெட் கோச் - நீண்ட அனுபவம் CSK அணிக்கு கைகொடுக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட காலப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், அவரது இடத்தை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நிரப்புகிறார். 2027 ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே அ... மேலும் பார்க்க

Asian Games 2026: Shooting-ல் Mass... MMA-வில் வரலாற்றுச் சாதனை! 6 பதக்கங்களுடன் இந்தியா! நாளை?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது பதக்க நாளில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு பதக்கங்களைக் குவித்துள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (10m Air Rifle) தனிநபர் பிரிவில் இர... மேலும் பார்க்க