செய்திகள் :

Aval Awards: ``சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை வாங்கணும் நினைச்சேன்; ஆனால்...’’ - நடிகர் அதர்வா

post image

அவள் விகடனின் `பவர்ஃபுல் பெர்ஃபார்மர்’ விருதை நடிகை நிமிஷா சஜயனுக்கு, நடிகர் அதர்வா வழங்கினார்.

விருது வழங்கியப் பின் பேசிய நடிகர் அதர்வா, ``எல்லோருக்கும் வணக்கம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விகடன் எதைச் செய்தாலும் மிகவும் பிரமாண்டமாகவும், கௌரவமாகவும் செய்வார்கள். இந்த விருது விழாவிற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதயம் முரளி படத்தின் முடிவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் 100% ஓட வேண்டும் என்று நினைத்தேன். கார்த்திக் சுப்பராஜ் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. முதல் ஷெட்யூலை முடித்துவிட்டோம்.

நிமிஷா சஜயன்
நிமிஷா சஜயன்

எனக்கு எப்போதுமே கஷ்டமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். நான் செய்த படங்களிலேயே மிகவும் கடினமான படம் இது. தாலியும் மண்டபமும் தயாராக இருக்கிறது; பெண் கிடைத்திருந்தால் திருமணமே செய்திருக்கலாம்!

சுந்தரா டிராவல்ஸ் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் முதன்முதலில் ஷூட்டிங் சென்ற படமும் அதுதான். அந்தப் பேருந்து மிகவும் பிரபலமானது.

இப்போது அந்தப் பேருந்தைப் பற்றிய ஒரு வீடியோவைப் பார்த்து, நிறைய பேர் எனக்கு அனுப்பி, அந்தப் பேருந்தையே வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். நானும் அதைப் பற்றி விசாரித்தேன். ஆனால், அந்தப் பேருந்து இல்லை, வேறு பேருந்து என்று சொன்னார்கள்.

முதன்முதலில் நிமிஷாவைப் பார்த்தபோது, சென்று ஹாய் சொன்னேன். கொஞ்சம் ஃபார்மலாக இருந்தது. ஆனால், மதிய ஷூட்டிலேயே 'வா, ஸ்ருதி, போலாம்' என்று, முதல் நாளிலிருந்தே அந்த வைப்தான் இருந்தது.

நடிகர் அதர்வா
நடிகர் அதர்வா

நிமிஷா எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். ஒரு படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் எனப் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தார். ஆனால், அந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகு உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட்டார். அதுதான் அவரின் டெடிகேஷன்" என்றார்.

Vikatan - Aval Awards Sponsors
Vikatan - Aval Awards Sponsors

"ஜெயலலிதா மேடம் நேரு ஸ்டேடியத்தைக் கட்டினப் பிறகு விளையாட்டு கட்டமைப்பு உருவாகவில்லை" - ஆதவ் அர்ஜுனா

அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா, "ஜெயலலிதா மேடம் கொண்டுவந்த திட்டத்தில் விளையாட்டு விடுதியில... மேலும் பார்க்க

"6 மொழிகள் தெரியும்; அடுத்து சைகை மொழி கத்துக்கணும்னு நினைக்கிறேன்"- நித்யா மெனென்

அவள் விகடனின் `Extraordinary Performer’ விருதை நடிகை நித்யா மெனெனுக்கு இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வழங்கினார்.விருது பெற்ற பின் நித்யா மெனென், "``நாம் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், சேவை செய்யும்... மேலும் பார்க்க

"சூர்யா சாருடன் படம் செய்ய wait பண்றேன்; ஆனா, 49, 50-வது படம் பண்றேனா.?" - ஆர்.ஜே.பாலாஜி

அவள் விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. 'நடிகர் சூர்யா'வின் 50-வது திரைப்படத்தை நீங்கள் இயக்குவீர்களா?' என்கிற கேள்விக்கு, ஆர்.ஜே.பாலாஜி, "சூர்யா சாருடன... மேலும் பார்க்க

'எதில் இறங்கினாலும் பெஸ்ட்டா இருக்கணும்'னு செல்வா சொல்லுவாரு; அதனால.! - ரோஜா | Aval Awards

அவள் விகடனின் `எவர்கிரீன் நாயகி’ விருதை நடிகை ரோஜாவுக்கு, நடிகர் நெப்போலியனும், நடிகர் `டாப் ஸ்டார்’ பிரசாந்த்தும் வழங்கினார்கள்.விருது வழங்கிய பின், ரோஜா குறித்து நெப்போலியன், ''ரோஜா எவர்கிரீன் என்பத... மேலும் பார்க்க

"விஜய் அவ்வளவாக எதையும் பார்த்துப் படிக்க மாட்டார்; அவருக்கு நான்-வெஜ் பிடிக்கும்" - ஷோபா ஷேரிங்ஸ்

தமிழக முதலமைச்சர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகருக்கு 'பெஸ்ட் மாம்' விருதை வழங்கினார் ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், பத்திரிகையாளர் ரபி பெர்னார்ட். விருது பெற்ற பின், ``விஜய்... மேலும் பார்க்க

`பிள்ளைக்காக தன் அடையாளத்தையே தள்ளிவைத்தவர்..!'- ஷோபா சந்திரசேகருக்கு விருது வழங்கிய விகடன் MD

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகருக்கு 'பெஸ்ட் மாம்' விருதை வழங்கியது அவள் விருதுகள். இந்த விருதை ஷோபா சந்திரசேகருக்கு வழங்கியவர், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன... மேலும் பார்க்க