Aval Awards: ``சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை வாங்கணும் நினைச்சேன்; ஆனால்...’’ - நடிகர்...
Aval Awards: ``சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸை வாங்கணும் நினைச்சேன்; ஆனால்...’’ - நடிகர் அதர்வா
அவள் விகடனின் `பவர்ஃபுல் பெர்ஃபார்மர்’ விருதை நடிகை நிமிஷா சஜயனுக்கு, நடிகர் அதர்வா வழங்கினார்.
விருது வழங்கியப் பின் பேசிய நடிகர் அதர்வா, ``எல்லோருக்கும் வணக்கம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விகடன் எதைச் செய்தாலும் மிகவும் பிரமாண்டமாகவும், கௌரவமாகவும் செய்வார்கள். இந்த விருது விழாவிற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதயம் முரளி படத்தின் முடிவு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் 100% ஓட வேண்டும் என்று நினைத்தேன். கார்த்திக் சுப்பராஜ் படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. முதல் ஷெட்யூலை முடித்துவிட்டோம்.

எனக்கு எப்போதுமே கஷ்டமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். நான் செய்த படங்களிலேயே மிகவும் கடினமான படம் இது. தாலியும் மண்டபமும் தயாராக இருக்கிறது; பெண் கிடைத்திருந்தால் திருமணமே செய்திருக்கலாம்!
சுந்தரா டிராவல்ஸ் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் முதன்முதலில் ஷூட்டிங் சென்ற படமும் அதுதான். அந்தப் பேருந்து மிகவும் பிரபலமானது.
இப்போது அந்தப் பேருந்தைப் பற்றிய ஒரு வீடியோவைப் பார்த்து, நிறைய பேர் எனக்கு அனுப்பி, அந்தப் பேருந்தையே வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். நானும் அதைப் பற்றி விசாரித்தேன். ஆனால், அந்தப் பேருந்து இல்லை, வேறு பேருந்து என்று சொன்னார்கள்.
முதன்முதலில் நிமிஷாவைப் பார்த்தபோது, சென்று ஹாய் சொன்னேன். கொஞ்சம் ஃபார்மலாக இருந்தது. ஆனால், மதிய ஷூட்டிலேயே 'வா, ஸ்ருதி, போலாம்' என்று, முதல் நாளிலிருந்தே அந்த வைப்தான் இருந்தது.

நிமிஷா எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர். ஒரு படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டும் எனப் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தார். ஆனால், அந்தப் படப்பிடிப்பு முடிந்த பிறகு உடனடியாக உடல் எடையைக் குறைத்துவிட்டார். அதுதான் அவரின் டெடிகேஷன்" என்றார்.


















