செய்திகள் :

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

post image

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர்.

இன்று மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பேசினார்.

அவர், “கடந்த சில ஆண்டுகளாக ஈரான் கடுமையான தடைகளைச் சந்தித்து வருகிறது.

ஆனால், சமீபத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டு வரும் தீவிர ராணுவ ஆக்கிரமிப்புகளின் காரணமாக, இந்த நெருக்கடிகள் கொஞ்ச மாதங்களில் மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளன.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

மனித உயிரிழப்புகளையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள இது, ஒரு முக்கியமான உண்மையை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. அதாவது, ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பையும், அதன் தேசிய மற்றும் பிராந்தியப் பாதுகாப்பையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது.

ஒரு நாட்டின் வர்த்தகம், ஆற்றல் (எனர்ஜி), உள்கட்டமைப்பு அல்லது நிதி அமைப்பு ஆகியவை அரசியல் அல்லது ராணுவ அழுத்தத்திற்கு உள்ளாகும்போதெல்லாம், அதன் பாதிப்புகள் அந்த நாட்டின் எல்லைகளைத் தாண்டி, பிராந்தியச் சமநிலையையும், ஏன் உலகளாவிய நிலையற்றத்தன்மையைக் கூட ஏற்படுத்தக் கூடும்” என்று பேசியிருக்கிறார்.

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும் ... மேலும் பார்க்க

BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்?

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்று இந்தியப் பிரதமர் மோடி - புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோட... மேலும் பார்க்க

"அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தி இருந்தால் இப்படி நடந்திருக்குமா?"- திருமாவளவன் கூறுவதென்ன?

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். "தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வே... மேலும் பார்க்க

’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

கோவை துடியலூர் அருகேயுள்ள அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனியாக சாலையில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த... மேலும் பார்க்க