செய்திகள் :

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

post image

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கும் முன்பு, அதே திட்டத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து அறிவிக்க வேண்டும். கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவசர அவசரமாக தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்பட்டது. அதன் இன்றைய நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

தலைமைச் செயலகம் என்பது மாநிலத்தின் அடையாளம். எனவே, புதிய தலைமைச் செயலகம் அமைத்தால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அதை மாற்றுவதற்கான தேவை எழாத வகையில், பொருத்தமான இடத்தில், தேவையான நிலத்தில் அமைக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில், புதிய இடத்தை தேட வேண்டியிருக்கும். பட்டினப்பாக்கத்திற்கு வரும் சாந்தோம் நெடுஞ்சாலை மிக குறுகலானது. அதை அகலப்படுத்துவதும் சாத்தியம் இல்லாதது. கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரை வழியாக பட்டினப்பாக்கம் வரும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால், அங்குள்ள மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டும். அப்படிச் செய்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும்.

விஜய்
விஜய்

எனவே, சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கரில், தலைமைச் செயலகம், சட்டமன்றம், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான வீடுகள், அரசு அலுவலர்கள் குடியிருப்புகள், பூங்காக்கள், மைதானங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மெட்ரோ ரயில், அகலமான பல அடுக்கு சாலைகள் போன்ற நவீன வசதிகளுடன், புதிய நகரத்தை உருவாக்க வேண்டும். அதுதான் நிரந்த தீர்வாக இருக்கும். இதற்கான இடத்தை அடையாளம் கண்டு, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, புதிய தலைமைச் செயலகம், சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அது நிலைத்து நின்று தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமையைப் பேசும்.

மாறாக, நான் வைத்ததுதான் சட்டம், என் வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகத்தை கட்டுவேன் என பிடிவாதமாக செயல்பட்டால், அது ஆபத்தில் முடியும். இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் எனக்கூறி அடுத்த 10 ஆண்டுகளில் தலைமைச் செயலகத்திற்கு இடம் தேட வேண்டியிருக்கும். இதையெல்லாம் உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையுடன்  முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift - என்ன பேசினார்கள்?

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்று இந்தியப் பிரதமர் மோடி - புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோட... மேலும் பார்க்க

"அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தி இருந்தால் இப்படி நடந்திருக்குமா?"- திருமாவளவன் கூறுவதென்ன?

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். "தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வே... மேலும் பார்க்க

’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

கோவை துடியலூர் அருகேயுள்ள அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தனியாக சாலையில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த... மேலும் பார்க்க

சட்டமன்றம் 2026: ` நேரலை - ஒரு வகையில் இது அரசியல் கல்வி; ஆனால் மாண்பு.?' - கே.பாலபாரதி | களம் 1

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை: குப்பைக் கிடங்காக மாறி வரும் பிரதான சாலை... அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில், சுமார் 2 கி.மீ பரப்பளவிற்குள் டஜனுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிகளும், கல்லூரிகளும் செறிந்து காணப்படுகின்றன.தூய யோவான் கல்லூ... மேலும் பார்க்க