செய்திகள் :

CJP-யின் தேசியக் கொடி போராட்டம்; மீண்டும் கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே; என்ன நடந்தது?

post image

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியாக் கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் எனக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குறிப்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார்.

ஜந்தர் மந்தர்
ஜந்தர் மந்தர்

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதனை மீறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (அக்.14) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியைக் காண்பித்தனர்.

உடனடியாக அங்கே இருந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஐந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி மற்றும் மும்பையில் 'லேரா தோ திரங்கா' (மூவர்ணக் கொடியை ஏந்துவோம்) என்ற போராட்டத்தை சிஜேபி இன்று நடத்த இருந்தது.

அறிவிக்கப்பட்டப்படி தேசியக் கொடி போராட்டத்தில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்ட சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் தடுத்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

இன்று காலை அபிஜித் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்தப்போது , "இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்.

உளவுத்துறை அதிகாரிகள் தன்னைக் கண்காணித்து வருகின்றனர். எண்களற்ற வாகனங்கள் தன் பின்னால் வருகிறது. நாட்டில் தேசியக் கொடியை ஏந்துவதற்காக சிறை செல்ல நேரிட்டாலும் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"திட்டங்களை அறிவித்து, அதில் ஊழல்கள் செய்ததால்தான் தோற்றீர்கள்" - ஸ்டாலினைச் சாடும் ஆதவ் அர்ஜுனா

இன்று கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்த நூலகம் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது தவெக இதற்குத் தங்களுடைய ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்கிறது எ... மேலும் பார்க்க

“போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுவோரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி” - பஞ்சாப் அரசைச் சாடும் அமித் ஷா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் ஆவார்.பஞ்சாப்பில் போதைப்பொருள் அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில... மேலும் பார்க்க

தேசியக் கொடி அசைப்பு பேரணி: "என்னை வேண்டுமானால் தூக்கிலிடுங்கள்; ஆனால்..." - அபிஜித் திப்கே

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காக்ரோஜ் ஜனதா கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளத... மேலும் பார்க்க

"ஸ்டாலின், விஜய் ரெண்டு பேருமே பாராட்டினாங்க" - பெரியார் அறிவுலகத்தை வடிவமைத்த பொன்னி பேட்டி

கோவையின் புதிய அடையாளமாக மாறியிருக்கும் பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.16) திறந்து வைத்தார். ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த நூலகத்தை சென்னை கட்டடக்கலை நிபுணர் பொன்னி என்பவர்... மேலும் பார்க்க

10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்... டெண்டர் கோரிய தமிழ்நாடு காவல்துறை

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்றோரின் பாதுகாப்புகளை உறுதி செய்யும் பொருட்டு ட்ரோன்களை வீழ்த்தும் வகையில் ஆன்டி ட்ரோன் துப்பாக்கிகளை வாங்க தமிழக காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ட்ரோன் கேமராதா... மேலும் பார்க்க

அமெரிக்கா: கோயிலில் திரண்டிருந்த இந்தியர்கள்; துப்பாக்கி வேலை செய்யாததால் தடுக்கப்பட்ட விபரீதம்

அமெரிக்காவில் சிகாகோவிற்கு அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்.வழக்கம் போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11), அந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் ஆகிக... மேலும் பார்க்க