செய்திகள் :

CWG 2026: 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் - 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா!

post image

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றோடு (ஆகஸ்ட் 2 ) நிறைவடைத்துள்ளது. இப்போட்டி இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது.

இந்தியாவிலிருந்து 122 வீரர், வீராங்கனைகள் 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற நிலையில், மொத்தம் 39 பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் பதக்க வேட்டையில் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் குத்துச்சண்டை முக்கிய பங்காற்றின. இந்த இரு பிரிவுகளிலும் தலா 10 பதக்கங்கள் கிடைத்தன. பளுதூக்குதல் பிரிவில் 7 பதக்கங்களும், தடகளத்தில் 6 பதக்கங்களும் இந்தியாவின் கணக்கில் சேர்த்தன.

மொத்த பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கடந்த காமன்வெல்த் போட்டிகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தனது நிலையை தக்க வைத்திருப்பதோடு, சில பிரிவுகளில் முன்னேற்றமும் அடைந்திருக்கிறது.

துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குத்துச்சண்டையிலும் பல பிரிவுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறி பதக்கங்களை கைப்பற்றினர். பளுதூக்குதல் மற்றும் தடகளத்திலும் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா 171 பதக்கங்கள் பெற்று முதலிடத்தையும், இங்கிலாந்து 110 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், கனடா 62 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதில் இந்தியா 39 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

காமன்வெல்த் விளையாட்டில் 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா
காமன்வெல்த் விளையாட்டில் 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்த இந்தியா

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 61 பதக்கங்கள் வாங்கியிருந்தது அதை ஒப்பிடும்போது சில பிரிவுகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை குறைந்திருந்தாலும், புதிய வீரர்களின் எழுச்சியும், பல விளையாட்டுகளில் தொடர்ந்து பதக்கம் வெல்லும் திறனும் எதிர்கால சர்வதேச போட்டிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக விளையாட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க