செய்திகள் :

D56: "தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது ஏன்?" - வடிவேலு விளக்கம்

post image

'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் தனது 56-வது திரைப்படத்தின் பூஜை இன்று மதுரையில் நடைபெற்றது.

இதில் தனுஷுடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் நடிக்கிறார்.

D56 - Dhanush
D56 - Dhanush

கடந்த 2008-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்காதவன்' திரைப்படத்தில் வடிவேலுதான் முதலில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.

அவர் விலகிய பிறகு, அவருக்குப் பதிலாக நடிகர் விவேக் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.

தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது குறித்து வடிவேலு இந்தப் பட பூஜையில் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து பணியாற்றும் சிறந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. 'இத்தனை ஆண்டுகள் ஏன் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை, ஏன் இந்த இடைவெளி?' என்று நீங்கள் கேட்கலாம்.

D56 - Dhanush
D56 - Dhanush

நாங்கள் இருவரும் சேரக் கூடாது என்று நினைத்த சில சக்திகள், எங்களுக்கு இடையே தேவையில்லாத மனக்கசப்புகளை ஏற்படுத்திவிட்டன.

ஒரு சிறிய தீப்பொறியைப் பற்றவைத்து, அதை மிகப்பெரிய நெருப்பாக மாற்றி எங்களுக்கு இடையே தூக்கிப் போட்டுவிட்டார்கள்.

ஒரு மூன்றாவது நபரால் தான் இந்த இடைவெளி உருவானது. இந்தப் படத்தின் பூஜை விழாவைப் பார்த்தால் ஏதோ பெரிய 'மாநாடு' நடப்பது போல இருக்கிறது." எனப் பகிர்ந்திருக்கிறார்.

D56: "பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம்" - எஸ்.ஜே.சூர்யா

'ஓம்' படத்தைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, ப... மேலும் பார்க்க

Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?

சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி' இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயா... மேலும் பார்க்க

Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!

90களின் தொடக்கம். மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா ('வேட்டை' முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம... மேலும் பார்க்க

Dorothy: "இனி 'டோரதி' உங்களுடையவள்... ஆனா இத மட்டும் பண்ணாதீங்க.!" - கார்த்திக் சுப்புராஜ் உருக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் இன்று (செப்.25) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்க... மேலும் பார்க்க

விஸ்வரூபம் : திரைக்குள்ளும் புறமும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 27

`சினி'ஸ்கோப் 27விஸ்வரூபம்பின் லேடனின் இருப்பிடத்தை அறிவதற்காக அல்-கய்தாவுக்குள் ஊடுருவி அதன் முக்கியப்புள்ளிகளாக இருக்கும் உமர், சலீம் போன்றோருடன் நெருக்கமாகிறார்கள் இந்திய ரா ஏஜெண்டுகளான விசாம் அகமது... மேலும் பார்க்க

`படத்துக்கு 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'னு டைட்டில் வச்சதுக்கு காரணம் இதுதான்..!'- இயக்குநர் ரவி பிரசன்னா

கோடம்பாக்கத்தின் ஹாட் ஆஃப் த டாபிக் ஆகியிருக்கிறது 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'. 'புரட்சி திருவினையாக்கும்', 'bite is the curse. fight is the cure' ஆகிய அடைமொழிகள் சூழ 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'யின் போஸ்டர்கள... மேலும் பார்க்க