செய்திகள் :

GPS-ஐ கனிம வளத்துறை இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை; நாளை முதல் அமல்

post image

ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நாளை முதல் அனுமதியில்லை.

ஜிபிஎஸ் டேட்டா
ஜிபிஎஸ் டேட்டா

கனிம வளத்தைச் சட்டவிரோதமாகக் கடத்துவதைத் தடுக்க, தமிழக அரசின் கனிமவளத்துறை கனிமம் ஏற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொறுத்தி அவற்றை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்க ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் மூலம் உத்தரவிட்டது.

அந்த அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையில "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் (MiMaS Portal) இணைப்பதற்குக் கடந்த 31.08.2026 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்

ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 6.75 சதவிகித வாகனங்கள் மட்டுமே ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி MiMaS Portal-உடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, 30.09.2026-க்குள் கனிமங்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி, அவற்றை MiMaS Portal-உடன் இணைக்கப்பட வேண்டும்.

அப்படி இணைக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே 01.10.2026 முதல் கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நடைச்சீட்டு வழங்க இயலாது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துக் குவாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியைப் பொருத்தி பதிவு செய்துகொள்ள இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டின் பல மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இதேபோல் அறிவித்துள்ளனர். ஜி.பி.எஸ் பொறுத்தி MiMaS Portal-உடன் இணைக்கப்படாத வாகனங்கள் 01.10.2026 முதல் கனிமங்களை ஏற்ற முடியாது.

கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள் குற்றச்சாட்டுக்கு முரணானவை" - நீதிபதி சொன்னது என்ன?

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவு.அதே போல் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் மீதான குற்றப் பத்திரிக்க... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு எதிராக பெண் ஒருவர் அவதூறா... மேலும் பார்க்க

புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்

புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள் பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதனடிப்படையில் பெண் த... மேலும் பார்க்க

சபரிமலை: கடைகளுக்கான இ-டெண்டரைச் சீர்குலைக்க தேவஸ்வம் ஊழியர்கள் சதி; கோபமான அமைச்சர்; பின்னணி என்ன?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்கள், புத்தக நிலை... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி விவகாரம்: "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார்" - பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக‌ பூதாகரமான ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி உயர்வு அடிப்படையில் எஸ்.பியான சுப்பிரமணியன், காரைக்காலில் பணியாற்றினார். அப்போது, `புத... மேலும் பார்க்க