செய்திகள் :

IPL: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CSK; SRH உடன் நடந்த மெகா டிரேட்! - கைமாறிய வீரர்கள் யார்?

post image

ஏன்பா... இவரு வர்றாரா? இல்ல... அப்போ அவர் வர்றாரா? அவரும் இல்லை... பின்ன யார்தான்யா வரப்போறாங்க? இப்படிப் பல கேள்விகளுடன் CSK ரசிகர்களை டிரேட் ஹைப்பில் வைத்திருந்தது CSK மேனேஜ்மென்ட்.

ஒவ்வொரு நாளும், 'அப்டேட் குடுடா... அப்டேட் குடுடா' என CSK ரசிகர்கள் லியோவை டேக் செய்யாத நாளே இல்லை. அதேபோல, CSK மேனேஜ்மென்ட் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டையும் டீகோட் செய்யாத ரசிகர்களும் இல்லை. அந்த அளவுக்கு CSK-வின் டிரேட் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருந்தது.

இந்த நிலையில்தான், IPL 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நான்கு வீரர்கள் அடங்கிய மெகா டிரேட் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகிய இருவரையும் ட்ரேடிங் முறையில் தங்கள் அணிக்குக் கொண்டு வந்துள்ளது CSK.

CSK! SRH

இதில் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.6 கோடிக்கும், ஜாக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கும் சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த ஏலத்தில் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.13 கோடிக்கு வாங்கியிருந்தது SRH. ஆனால், தற்போது அவரை ரூ.6 கோடிக்கு CSK அணிக்கு அனுப்பியுள்ளது.

சரி, இவங்க ரெண்டு பேரையும் வாங்கிய CSK, பதிலுக்கு யாரைக் கொடுத்திருக்கிறது தெரியுமா?

சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் ஆகிய இருவரையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேட் செய்துள்ளது CSK. இதில் கலீல் அகமது ரூ.4.8 கோடிக்கும், நாதன் எல்லிஸ் ரூ.2 கோடிக்கும் SRH அணிக்குச் சென்றுள்ளனர். இப்படி நான்கு வீரர்கள் கைமாறியுள்ள இந்த டிரேட், CSK மற்றும் SRH அணிகளின் பலத்தை எந்த அளவுக்கு மாற்றப் போகிறது? புதிய வீரர்களுடன் களமிறங்கப் போகும் CSK-வின் ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

IND vs NZ: "ஆட்டத்தை ஆரம்பிச்சது அர்ஷ்தீப்... முடிச்சு வச்சது கோலி!"- நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

'இது எங்க கிரவுண்டு... எங்க ஏரியா' எனச் சொந்த மண்ணில் கான்பிடன்ட்டாக களமிறங்கியது நியூசிலாந்து. ஆனால், எதிர்முனையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வைத்திருந்த திட்டமே வேறு! இந்தியா – நியூசிலாந்து அணிகளுக... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவின் `அதிரடி' ஆட்டக்காரன் - ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்! - குட் பை மேக்ஸ்

'மேக்ஸ்வெல்' - எடுத்த முடிவுஅதிசயங்கள் நிகழ்வது மட்டுமில்லை, நிகழ்த்தவும் படும் என்பதற்கு சாட்சியாய் ,2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக "கிளேன் மேக்ஸ்வெல்" நிகழ்த்தி... மேலும் பார்க்க

IND Vs NZ: "கொஞ்சம் அலட்சியமாகச் செயல்பட்டுவிட்டோம்!" – தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக்!

முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ... மேலும் பார்க்க

`யார் சாமி இவன்?'- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!

டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விராட் க... மேலும் பார்க்க

“காயம் ஏற்பட்டால்தான் வாய்ப்பா?” – வைபவை வீட்டுக்கு அனுப்பச் சொன்ன ஆகாஷ் சோப்ரா!

கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதுமா? அந்தத் திறமையை வெளிப்படுத்தத் தொடர்ந்து வாய்ப்பும் கிடைக்க வேண்டுமல்லவா! அப்படித் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்தும், அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்... மேலும் பார்க்க

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ... மேலும் பார்க்க