TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத்...
ko 15: "உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது..!"- கே.வி.ஆனந்த் குறித்து ஜீவா
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'கோ'.
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
படம் ரிலீஸாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் 'கோ' பட போஸ்டரை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து ஜீவா பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்த நாளில், எனக்கு மிகவும் பிடித்த கே.வி. ஆனந்த் சாரை நினைவு கூர்கிறேன்.
உங்களிடமிருந்து வந்த அந்த முதல் தொலைபேசி அழைப்பும், கடைசி குறுஞ்செய்தியும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. நீங்கள் என்றும் நீங்காப் புகழுடன் வாழும் ஒரு மேதை. நன்றி சார்.
அஸ்வின்(கோ படத்தில் ஜீவா கதாபாத்திரத்தின் பெயர்) மற்றும் மற்றவர்கள் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நன்றி சார்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
On this day, I remember my most favourite #KVAnand sir. I still remember the first phone call and the last message from you, sir. You were, you are, and you will always remain an ever-living genius. Thank you, sir.
— Jiiva (@JiivaOfficial) April 22, 2026
Thank you all for the love showered on Ashwin and the others.… pic.twitter.com/4OlYa5GazX

















