செய்திகள் :

Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..!" - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!

post image

மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்யத் தொடங்கியதும் பலா் முண்டியடித்து பந்தலில் ஒதுங்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். 25 பேர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவா்களுக்கு கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொல்கத்தா
கொல்கத்தா

இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் சோனு பால் (25). குமோர்துலியைச் சேர்ந்த இவர், தன் தாயுடன் துர்கா பூஜையைக் காண வந்திருந்தபோதுதான் இந்த திடீர் அசம்பாவிதம் நடந்துள்ளது. இது குறித்து பேசிய அவர், ``என் அம்மா என் கண் முன்பே நெரிசலில் சிக்கி நசுங்கி உயிரை விட்டார். நானும் பிழைத்திருக்கக் கூடாது. வெளியே பலத்த மழை பெய்ததால், மழைக்கு ஒதுங்குவதற்காக நுழைவாயிலில் நின்றிருந்தவர்கள், உள்ளே நுழைய ஒருவரையொருவர் தள்ளத் தொடங்கினர். அந்தத் தள்ளுமுள்ளுவில் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். நான் எப்படியோ சுதாரித்து எழுந்து என் தாயைத் தேடிச் சென்றபோது, அவர் உயிரற்றுக் கிடந்தார்," என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மழையின் காரணமாக பந்தலின் நுழைவாயிலில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்துள்ளனர். திடீரென மழை தீவிரமடைந்ததால் பந்தலுக்குள் நுழைய மக்கள் முண்டியடித்தனர். பந்தல் அமைக்கப்பட்டிருந்த பகுதி மிகக் குறுகியதாகவும், மின் விளக்குகள் ஏதுமின்றி கடும் இருளாகவும் இருந்ததால் நிலைமை கைமீறிப்போனது. நெரிசலில் பந்தலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் பீதி அதிகமானது. குழந்தைகள், பெண்கள் உட்படப் பலரும் ஒருவர் மீது ஒருவராக விழுந்து மூச்சுத்திணறினர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அச்சமயத்தில் அவர்களைக் காப்பாற்ற காவல்துறையோ அல்லது தொண்டர்களோ அங்குப் போதிய அளவில் இல்லை. மயக்கமடைந்தவர்களைப் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு அவசர அவசரமாகத் தூக்கிச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தீவிர இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, ``காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் துர்கா தேவியைப் பிரார்த்திக்கிறேன்." எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி... நவராத்திரி விழாவில் சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 ம... மேலும் பார்க்க

சாலையோரம் மீன் விற்ற பெண்... கான்க்ரீட் இயந்திரம் மோதி பலி - தொட்டியத்தில் அரங்கேறிய சோகம்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (வயது: 47). இவர், திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக மீன்கடை நடத்தி வந்தார். இந்நிலையி... மேலும் பார்க்க

பீகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சிறார் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் பக்கத்து கிராமத்தில் நடக்கும் விருந்து ஒன்றில் பங்கேற்பதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரகோபூர் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் ஒரு கரை... மேலும் பார்க்க

'எல்லாம் எங்க அப்பா பார்த்துப்பார் ' போதையில் கார் ஓட்டி 3 உயிரைப் பறித்த தொழிலதிபர் மகன்!

கேரளத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘இஹா டிசைன்ஸ்’ சேர்மன் சஜீவ் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் நூஹா ஆகியோரின் மகனான சுஹைல் சஜீவ்(19). இவர் காக்கநாடு ராஜகிரி கல்லூரியில் பி.காம் பயின்று ... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்; அலையில் அடித்துச் செல்லப்பட்ட 8 மாணவர்களுக்குச் நேர்ந்த சோகம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த வின்னர்ஸ் அகாடமி என்ற கோச்சிங் மையத்தில் படிக்கும் மாணவர்கள் அடங்கிய 48 பேர் கொண்ட குழு மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான திவேகர்... மேலும் பார்க்க

பெரம்பலூர்: பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் தூங்கியவர்கள் மீது ஏறிய ஜே.சி.பி; இருவர் பலியான சோகம்!

பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பார்க்கிங் பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஜேசிபி வாகனம் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதா... மேலும் பார்க்க