செய்திகள் :

Madurai Rain: "நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது; திமுக திரும்பிக்கூடப் பார்க்கவில்லை" - சசிகலா

post image

"தி.மு.க., அரசு கட்சி நிகழ்வுகளை ஒழுங்காக நடத்துகிறார்கள். அதற்கு உண்டான வேலைகளை மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காகத் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை..." என்று வி.கே. சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த வி.கே.சசிகலா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரையில் கடந்த ஐந்தாறு நாட்களாக அதிக மழை பெய்துள்ளது. நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பந்தல்குடி கால்வாயில் மழைநீர் வடிய வேண்டும். வடியவில்லை தி.மு.க அரசாங்கம் வந்ததிலிருந்து, எங்குமே தூர் வாரவில்லை.

சசிகலா

மதுரையில் முல்லை நகர், குறிஞ்சி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. யாரும் சென்று பார்க்கவில்லை. அரசாங்கத்திலிருந்து உதவியும் செய்யவில்லை. நிறைய மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் இந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் இந்த தீபாவளிக்கு மழையால் சிறிய, பெரிய வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.

தி.மு.க அரசு கட்சி நிகழ்வுகளை ஒழுங்காக நடத்துகிறார்கள். அதற்கு உண்டான வேலைகளை மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காகத் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை.

மொத்தத்தில் தமிழக மக்கள் தி.மு.க அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். நான் செல்லும் இடமெல்லாம் அதைத்தான் மக்கள் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு விடிவு வரும். 2026-ல் நிச்சயமாக அம்மாவுடைய ஆட்சி வந்தால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமத்திற்குத் தண்ணீர் வழங்கும் தொட்டி இருந்த அரசு இடத்தை ஒரு தி.மு.க நிர்வாகி தனக்குச் சொந்தமாகப் பட்டா போட்டுள்ளார். இதை எப்படி அந்த மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.

சசிகலா

தமிழக முழுவதும் தி.மு.கவினர் அரசாங்கத்தை நடக்க விடாமல் செய்கிறார்கள். அரசு இடத்தைப் பட்டா போட்டு எடுத்துக் கொள்கிறார்கள். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை.

மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் சாலையே தெரியாத அளவிற்குக் குளம் போல் உள்ளது. இதற்கு விரைந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு ஒவ்வொரு இடத்திலும் விழா நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க அரசுக்கு இன்னும் ஒரு வருஷம்தான் உள்ளது. அனைத்து மாநகராட்சியிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். வேலையே நடைபெறவில்லை. எங்குப் பார்த்தாலும் குப்பை கூளமாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டிய பாடப்புத்தகம் கொடுக்கவில்லை. காலாண்டு தேர்வு முடிந்துவிட்டது. எப்போது கொடுக்கப் போகிறீர்கள்?

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்த போது 6000 கூட்டத்திற்கு மேல் பேசி உள்ளார். அம்மா முதல்வராவதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.

சசிகலா

சமூக நீதியைத் திராவிட தலைவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அதனால்தான் பட்டி தொட்டியில் உள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். நாம் யாரையும் தட்டிக் கேட்க நமக்குக் கற்றுக் கொடுத்தது பெரியார், அண்ணாதான். ஜாதி, மதம் அவர்கள் பார்த்ததே இல்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் 69 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்து விட்டோம். எந்த மாநிலத்திலும் அதுபோல் நடைமுறையில் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இதெல்லாம்தான் சமூக நீதி." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Tamil News Live Today: தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்! நிறைவேற்றப்படும் 26 தீர்மானங்கள்?

முதல் மாநாட்டுக்குப் பிறகு நடைபெறும் செயற்குழு கூட்டம்!விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27-ல் நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் கடந... மேலும் பார்க்க

Canada: அமித் ஷா மீது கனடா முன்வைத்த குற்றச்சாட்டு: கொதிக்கும் இந்திய அரசு! - என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின... மேலும் பார்க்க

`தம்பி என்பது வேறு; விஜய் ஒன்னு கொள்கையை மாத்தணும், இல்லைன்னா..!' - சீமான் விமர்சனம்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்ததிலிருந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் அரசியல் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.அந்தவகையில், நாதக சார்பில் நேற்று ந... மேலும் பார்க்க

Prashant Kishor : `தேர்தல் ஆலோசனைக்கு நான் வாங்கும் கட்டணம்..' - வெளிப்படையாக பேசிய பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தின் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலுக்கான முடிவு 23-ம் தேதி வெளியாகும். எனவ... மேலும் பார்க்க

Iron Beam: 'அயர்ன் டோமின் அட்வான்ஸ்ட் வெர்சன்' - அறிமுகம் செய்ய உள்ள இஸ்ரேல்!

பாலஸ்தீனம், லெபனான், ஈரான்...என இஸ்ரேல் தற்போது போரிட்டு வரும் நாடுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றன. இத்தனை நாடுகளிடம் இஸ்ரேல் போரிட்டாலும் அது இன்னமும் பலமாக உள்ளது என்றால் அதற்கு அமெரிக்கா ஒரு... மேலும் பார்க்க

Tvk மாநாடு: ``விஜய் தன் அரசியல் எதிரியாக முன்னிறுத்தியது யாரை?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

த.வெ.க முதல் மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் விஜய், "கட்சியின் கோட்பாடாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம... மேலும் பார்க்க