செய்திகள் :

"Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு" - நிதின் கட்கரி கூறியதென்ன?

post image

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இதுதொடர்பாக பேசிய அவர், "அரசியலில் அனைத்து விதமான அனுபவங்களையும் நான் கடந்துவந்துவிட்டேன். இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து தனக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே தனிப்பட்ட தொடர்போ அல்லது அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவோ இருப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள், கட்டமைப்புப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாகவே அங்கிருந்த வாக்காளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

வாக்காளர்கள் மிகவும் விவேகமானவர்கள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு உண்மையாக உழைக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். கடந்தக்கால தேர்தல் ஒன்றில் வாக்காளர்களுக்குத் தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கிப் பிரச்சாரம் செய்த போதிலும், அந்தத் தேர்தலில் நான் தோல்வியைத் தழுவினேன்" என்று பேசியிருக்கிறார்.

Vijay: "சினிமாவில்தான் விஜய் ஹீரோ; நிஜத்தில் அவர் வில்லன்" - டி.டி.வி. தினகரன் காட்டம்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றார்கள். அதனால், இடைத்தேர்தல் நடத்த... மேலும் பார்க்க

TVK: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் அறிவிப்பு - யார் போட்டியிடுகிறார்கள்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக... மேலும் பார்க்க

`வாய்திறக்காமல் இருங்க' - விளாசிய திமுக; கொந்தளித்த திருமா டு வசூலில் இறங்கிய தவெக MLA | கழுகார்

சீனியர்களை விளாசிய தி.மு.க தலைமை!“வாய்திறக்காமல் இருங்க ப்ளீஸ்...”“கொளத்தூர் தொகுதியில் த.வெ.க எம்.எல்.ஏ வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கப்பட்ட வழக... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் படுகொலை: "முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?" - உதயநிதி கேள்வி

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன்... மேலும் பார்க்க

ஜெயின் பண்டிகை: "அசைவம், வெங்காயம் எடுத்துவர மாணவர்களுக்குத் தடை" - பாஜக MLA-வின் பள்ளியில் சர்ச்சை

ஜெயின் மதத்தினர் ஒவ்வொரு ஆண்டும் பர்யூஷன் எனப்படும் பண்டிகையை 8 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நாட்களில் ஜெயின் மதத்தினர் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்... மேலும் பார்க்க