செய்திகள் :

பிரதீப் ராஜ் படுகொலை: "முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?" - உதயநிதி கேள்வி

post image

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போடுவதாக பிரதீப் குற்றம்சாட்டி இருந்த நிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பிரதீப் ராஜ்
பிரதீப் ராஜ்

இந்தப் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூரக் கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ எனப் பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாகச் சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்தக் கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.

TVK: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் அறிவிப்பு - யார் போட்டியிடுகிறார்கள்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக... மேலும் பார்க்க

`வாய்திறக்காமல் இருங்க' - விளாசிய திமுக; கொந்தளித்த திருமா டு வசூலில் இறங்கிய தவெக MLA | கழுகார்

சீனியர்களை விளாசிய தி.மு.க தலைமை!“வாய்திறக்காமல் இருங்க ப்ளீஸ்...”“கொளத்தூர் தொகுதியில் த.வெ.க எம்.எல்.ஏ வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கப்பட்ட வழக... மேலும் பார்க்க

ஜெயின் பண்டிகை: "அசைவம், வெங்காயம் எடுத்துவர மாணவர்களுக்குத் தடை" - பாஜக MLA-வின் பள்ளியில் சர்ச்சை

ஜெயின் மதத்தினர் ஒவ்வொரு ஆண்டும் பர்யூஷன் எனப்படும் பண்டிகையை 8 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த நாட்களில் ஜெயின் மதத்தினர் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்... மேலும் பார்க்க

`அமெரிக்க இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஈரான் போர் முடிவுக்கு வரும்' - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. ஈரானில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி... மேலும் பார்க்க

"Red-Light Area-வுலதான் அதிக ஓட்டு வந்துச்சு" - நிதின் கட்கரி கூறியதென்ன?

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறா... மேலும் பார்க்க