செய்திகள் :

TVK: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர் அறிவிப்பு - யார் போட்டியிடுகிறார்கள்?

post image

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாக்கு
வாக்கு

இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக நேற்று அறிவித்திருந்தது. மதுராந்தகத்தில் திமுக சட்டத்துறை செயலர் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா ஆகியோரும் போட்டியிடுவதாக திமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தவெக தற்போது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுவதாக தவெக அறிவித்திருக்கிறது.

மரகதம் குமரவேல்
மரகதம் குமரவேல்

அதிமுகவில் இருந்து தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட தவெக வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

CM Vijay: 'முதல்வரின் லண்டன் பயணம்; பரம ரகசியம் காக்கும் தமிழக அரசு!'

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு செல்லவிருக்கிறார். ஆனால், முதல்வர் எதற்காக லண்டன் செல்கிறார்? லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: ``காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறதா?" - டிடிவி தினகரன்

கந்துவட்டிக் காரர்களின் தொல்லையால் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், தன்னைக் காப்பாற்றும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் பிரதீப் ராஜ் (30).காவல்துறை கந்துவட்டிகாரர்களுக்கு ஆதரவா... மேலும் பார்க்க

'வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை; லைனுக்கு வந்த சி.எம் விஜய்!' - முழு தகவல்

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டி... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்... பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாகப் புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன்... மேலும் பார்க்க

Vijay: "சினிமாவில்தான் விஜய் ஹீரோ; நிஜத்தில் அவர் வில்லன்" - டி.டி.வி. தினகரன் காட்டம்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு சென்றார்கள். அதனால், இடைத்தேர்தல் நடத்த... மேலும் பார்க்க

`வாய்திறக்காமல் இருங்க' - விளாசிய திமுக; கொந்தளித்த திருமா டு வசூலில் இறங்கிய தவெக MLA | கழுகார்

சீனியர்களை விளாசிய தி.மு.க தலைமை!“வாய்திறக்காமல் இருங்க ப்ளீஸ்...”“கொளத்தூர் தொகுதியில் த.வெ.க எம்.எல்.ஏ வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கப்பட்ட வழக... மேலும் பார்க்க